வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மாஸ் காம்போவில் உருவாகும் அட்லீயின் படம்.. தலையசைத்த 2 ஜாம்பவான்கள்

Director Atlee: இயக்குனர் அட்லீ தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பது போல அவர் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட்டு தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில படங்கள் இயக்கிய நிலையில் குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஜவான் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்.

ஜவான் படத்தை பார்த்து மிரண்டு போன பாலிவுட் ஹீரோக்கள் அங்கேயே அட்லீயை வளைத்து போட திட்டமிட்டு இருக்கின்றனர். அதன்படி பாலிவுட் ஹீரோக்களின் படங்களை அடுத்து அடுத்து இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் அட்லீ களமிறங்கி இருக்கிறார்.

Also read: விஜய்க்கு அடுத்த பட கதை சொன்ன அட்லீ.. ஆகா, இது அந்த படமல என உஷாரான தளபதி

அதன்படி கீர்த்தி சுரேஷ் அட்லீ தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மாஸ் காம்போவில் அட்லீயின் படம் ஒன்று உருவாக இருக்கிறது. அவரின் ஹீரோ வரிசையில் முக்கியமாக பார்க்கப்படும் இரண்டு ஹீரோக்கள் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான். ஜவான் படத்தில் கேமியோ தோற்றத்தில் விஜய் பங்கு பெறுவார் என கூறப்பட்டது.

ஆனால் ஜவான் படம் வெளியான பிறகு தளபதி ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தான் தந்தது. இந்நிலையில் சமீபத்தில் அட்லீயின் பிறந்த நாளில் ஷாருக்கான் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து நடிக்கும்படி ஒரு ஸ்கிரிப்ட்டை தயார் செய்ய சொன்னார்களாம். இதில் தன்னுடைய பிறந்த நாளுக்காக சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்தாராம்.

Also read: அட்லீக்கு மட்டும் கிடைக்கும் மாலை, மரியாதை.. கண்டுகொள்ளாமல் கை கழுவி விடப்பட்ட அஜித் நண்பர்

அதன் பிறகு விஜய் அட்லீக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாராம். நீ எழுதும் கதையில் நான் ஒரு பகுதியாக இருப்பேன் என்றும், இது பற்றி நாம் சேர்ந்து பேசுவோம் சரியா என்று கேட்டிருந்தாராம். இது தன்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்ததாக அட்லீ கூறி இருந்தார். ஆகையால் ஷாருக்கான் மற்றும் விஜய் இருவருமே இப்போது ஒன்றாக நடிப்பதில் விருப்பமாக இருப்பதால் விரைவில் இதற்கான பயணத்தை அட்லீ தொடங்க இருக்கிறார்.

ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரத்தை முழு படமாக எடுக்க அட்லீ திட்டம் வைத்திருப்பதாக கூறி இருந்தார். அந்த படத்தில் ஷாருக்கானை நடிக்க வைப்பாரா அல்லது வேறு ஒரு புதிய படத்தில் இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து நடிப்பார்களா என்பது விரைவில் தெரியவரும்.

Also read: லோகேஷுக்கு அட்லீய விட கம்மியா சம்பளம் கொடுத்து கரெக்ட் செய்த சன் பிக்சர்ஸ்.. காப்பி கதை செய்யும் ஸ்மார்ட் வொர்க்

Trending News