வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கதை திருட்டில் வசமாக மாட்டிய சங்கர்.. பீதியில் அட்லீ?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். ஷங்கரின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும். மேலும் சயின்டிஸ்ட் ரேஞ்சுக்கு தன்னுடைய படங்களில் அறிவியலை புகுத்தி எடுப்பார்.

அப்படி 2010 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் எந்திரன். ஆனால் இந்த படத்தின் உண்மையான கதை வேறு ஒருவருடையது எனவும், இது சம்பந்தமாக பத்து வருடமாக ஒரு கேஸ் கோர்ட்டில் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கோர்ட்டில் ஆஜராகும்படி வந்த நோட்டீஸை கண்டுகொள்ளாமல் அதற்கு எதிர் நோட்டீஸ் அனுப்பி சாக்கு போக்கு சொல்லி கொண்டிருந்த சங்கரை வீடு புகுந்து தூக்கி விடுவேன் என கோர்ட்டிலிருந்து ஆர்டர் வந்துள்ளது. இதனால் அரண்டு போன ஷங்கர் அடுத்த முறை கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராகி விடுகிறேன் என சொல்லி விட்டார்.

பிரச்சினையில் மாட்டியதால் சங்கர் கலக்கத்தில் இருக்கிறார் என்றால் ஒரு நியாயம் தான். ஆனால் சம்பந்தமே இல்லாமல் அட்லீ தன்னுடைய வீட்டில் பம்மி கொண்டிருக்கிறார் என்ற செய்திதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் கேலி கிண்டல்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் அட்லீ இயக்கிய அனைத்து படங்களும் திருட்டு கதை என பலரும் எழுத்தாளர் சங்கத்தில் முறையிட்டது தான்.

அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, தெறி போன்ற படங்கள் மணிரத்தினம் இயக்கிய மௌனராகம் மற்றும் சத்ரியன் போன்ற படங்களின் காப்பி என பிரச்சனை எழுந்தது. மெர்சல் படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் எனவும் செய்திகள் வந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் தனக்கும் கேஸ் போட்டு பிடிவாரண்டு போட்டு விடுவார்களோ என கலக்கத்தில் உள்ளாராம் அட்லீ. மேலும் சங்கரின் அஸிஸ்டண்ட் டைரக்டர் என்பதால் கண்டிப்பாக வீடு புகுந்து தூக்கிச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

shankar-atlee-cinemapettai-01
shankar-atlee-cinemapettai-01

சங்கருக்கே இந்த நிலைமை என்றால் கண்டிப்பாக அட்லீ மீது கம்ப்ளைன்ட் கொடுத்தால் நமக்கு ஏதாவது நன்மை நடக்கும் என தற்போது பழைய விஷயங்களை எல்லாம் நோண்ட ஆரம்பித்து விட்டார்களாம் கோலிவுட் வாசிகள்.

Trending News