வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கைகலப்புடன் முடிந்த சந்திரமுகி 2 விழா.. லாரன்ஸ்சை போல் விழி பிதுங்கி நிற்கும் அட்லீ

Atlee: பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் தான் சந்திரமுகி. முதல் பாகம் திரையரங்குகளில் அதிக நாள் ஓடி வசூல் செய்த நிலையில் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கி உள்ளார். ஆனால் இந்த படத்தில் லாரன்ஸ் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

மேலும் கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார் மற்றும் வடிவேலு போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ஜேபிஆர் இன்ஜினியரிங் காலேஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் அதிக கட்டுப்பாட்டுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் லாரன்ஸுக்கு பத்து பவுன்சர்கள் உடன் இருந்தனர்.

Also Read : என் ட்ரஸ்டுக்கு பணம் அனுப்பாதீங்க.. ஒரே போடாய் போட்ட ராகவா லாரன்ஸ்

அதில் ஒரு பவுன்சர் காலேஜ் பசங்கள் மீது கை வைத்து விட்டார். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. நேரடியாகவே லாரன்ஸ் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனையை சரி செய்துவிட்டார். இந்த விஷயத்தை அறிந்த அட்லீ இப்போது விழி பிதுங்கி நிற்கிறாராம்.

அதாவது ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி ஆகிய பிரபலங்களை வைத்து ஜவான் படத்தை அட்லீ இயக்கியிருக்கிறார். இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதற்காக சாய் ராம் இன்ஜினியரிங் காலேஜில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Also Read : அட்லீக்கு டிமிக்கி கொடுத்த விஜய்.. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எஸ்கேப் ஆன தளபதி

ஷாருக்கான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்பதால் எப்படியும் 15 பவுன்சர்களுக்கு மேல் தான் வருவார்கள். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த செய்தி வெளியாகி ஜவான் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை உண்டாக்கும். ஏற்கனவே பாலிவுட்டில் சில படங்கள் தான் வெற்றி.

மேலும் கிட்டதட்ட நான்கைந்து வருடங்களாக ஜவான் படத்தையே நம்பி அட்லீ வேலை பார்த்த நிலையில் இப்போது சந்திரமுகி 2 விழாவால் கலக்கத்தில் இருக்கிறார். ஜவான் நிகழ்ச்சியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக முடிய வேண்டும் என்று மிகுந்த பதட்டத்தில் அட்லீ இருந்து வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : தேரை இழுத்து தெருவில் விட்ட அட்லீ.. அக்கடதேசம் கூட்டிட்டு போய் அசிங்கப்படும் அனிருத்

Trending News