செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய்யை வீழ்த்த சன் பிக்சர்ஸ் எடுத்த அஸ்திரம்.. பெருந்தலைகள் பிரச்சனையில் சிக்கிய கிரிமினல் மைண்ட்

Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணைகிறார். இதற்கிடையில் விஜய் அட்லிக்கு ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஏற்கனவே அட்லி- விஜய் காம்போவில் வெளியான பிகில், தெறி, மெர்சல் போன்ற மூன்று படங்களும் தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்ததால் இவர்கள் கூட்டணி மறுபடியும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு இப்போது வாய்ப்பே இல்லை. அட்லி ஏற்கனவே சன் பிக்சர்ஸ் உடன் ஒரு படம் பண்ணுவதாக அக்ரீமெண்ட் போட்டிருக்கிறார். நிச்சயமாக விஜய்- அட்லி- சன் பிக்சர்ஸ் காம்பினேஷன் இருக்கவே இருக்காது. இதற்கு பின்புறம் பெரிய காரணம் இருக்கிறது.

Also read: லோகேஷ் கூப்பிட்டும் கதாபாத்திரம் பிடிக்கலைன்னு நோ சொன்ன நடிகர்..விசாரித்துப் பார்த்தால் கமலுடன் டிஷ்யூம்

விஜய்க்கு அரசியல் கனவு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் உடன் படம் பண்ணினால் கலாநிதி மூலமாக DMK பேச்சுக்களை கேட்க வேண்டியது இருக்கும். அதனால் அரசியலுக்கு எந்த இடையூறும் வந்துவிடக்கூடாது என்று விஜய், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை சமீப காலமாகவே அவாய்ட் பண்ணி வருகிறார்.

இதில் சில்வண்டு போல் அட்லி தான் மாட்டிக் கொண்டு தவிக்கிறார். அட்லிகாக சன் பிக்சர்ஸ் படத்தில் விஜய் நடிக்க மாட்டார். ஏனென்றால் அந்த அளவிற்கு சினிமாவிலும் பாலிடிக்ஸ் நடந்து கொண்டிருக்கிறது. கலாநிதி மாறன் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என அடித்து சொல்லி விஜய்யை தாக்கி பேசினார்.

Also read: ரஜினியின் அடுத்த பான் இந்தியா படத்தின் அதிர வைக்கும் அப்டேட்.. லியோவை மிஞ்ச களம் இறக்கும் 4 ஹீரோக்கள்

அது மட்டுமல்ல உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் வாரிசு படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்று அந்த படத்திற்கு மிகக் குறைந்த அளவில் மட்டுமே ஸ்கிரீனிங் கொடுத்து வசூலுக்கு பங்கம் விளைவித்தார். இப்படி தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் விஜய்க்கு எதிராக வேலைகளை தொடர்ந்து செய்கின்றனர்.

இதற்கு காரணம் அவர் அரசியலுக்கு வந்தால் தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடியவர்களுக்கு பேராபத்தாக இருக்கும் என்பதாலே இதெல்லாம் நடக்கிறது. ஆகையால் நிச்சயம் அட்லி படத்தில் விஜய் நடித்தாலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்.

Also read: நன்றி மறந்த தளபதி.. விஜய்க்காக போராடி காப்பாற்றி விட்ட நடிகருக்கு செய்த துரோகம்

Trending News