புதன்கிழமை, ஜனவரி 8, 2025

லோகேஷ் கனகராஜ் மீது பொறாமையில் அட்லீ.. அண்ணனை பிரிச்சு விட்டாராமே!

சினிமாவில் அட்லீ படம் எடுத்து பெரியாள் ஆனதை விட ஏழு ராகம்தான் ஏழு தாளம்தான் என சினிமாவுக்கு ஒரு தனி விமர்சனத்தை கொடுத்ததனால் பல கேலி கிண்டல்களுக்கு ஆளானவர் அட்லீ. அரைத்த மாவையே அரைக்கிறார் அட்லீ என்ற பேச்சுக்கள் எழுந்தாலும் அதையும் சூப்பர் ஹிட்டாக்க தனித்திறமை வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

அட்லீ பழைய படங்களின் கதைகளை தூசி தட்டி எடுத்திருந்தாலும் விஜய்யின் சினிமா வளர்ச்சிக்கு அந்த படங்கள் பெரிய அளவில் உதவி செய்தது. ஆனால் சமீபகாலமாக விஜய்யின் பார்வை மொத்தமும் லோகேஷ் கனகராஜ் மீது விழுந்துள்ளது. தயாரிப்பாளருக்கு தேவையில்லாத எந்த ஒரு செலவையும் வைக்காமல், விஜய்யின் கேரியரில் விஜய்க்கு அவரையே வித்தியாசமாக காட்டியது என அனைத்தும் பிடித்துப் போய்விட்டதாம்.

மாஸ்டர் படத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். விஜய்யின் சினிமா கேரியரில் மாஸ்டர் படத்திற்கு ஒரு தனியிடம் உண்டு. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் விஜய்யின் நடிப்புக்கு தீனி போடுகிற படம்தான் மாஸ்டர். இதுதான் தற்போது அட்லீக்கு பெரிய பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

விஜய் தற்போது அட்லீயை நட்பு ரீதியாக சந்தித்தாலும் புதிய படம் பற்றி பேச்சை ஆரம்பித்தால் அட்லீக்கு அல்வா கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறாராம். இதனால் லோகேஷ் கனகராஜ் விஜய்யை இப்படி வசியம் செய்து விட்டாரே என செம பொறாமையில் உள்ளாராம் அட்லீ.

அந்த பொறாமை சமீபத்தில்தான் அனைவருக்கும் தெரிய வந்ததாம். விஜய்யின் பிகில் படத்தை பாராட்டி லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியான பிறகு அட்லீ அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட தற்போது வரை பேசவில்லை.

lokesh-atlee-cinemapettai
lokesh-atlee-cinemapettai

அதற்கு மாறாக நேற்று சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை பற்றி தெரிவித்திருந்தார். அந்த படத்தை அட்லீயின் அஸிஸ்டண்ட் டைரக்டர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லோகேஷ் மீது பொறாமையில் இருக்கும் அட்லீயின் இந்த விஷயம் மெல்ல மெல்ல விஜய் ரசிகர்களுக்கே ஓபெனாக தெரிய வந்து விட்டதாம்.

Trending News