சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மனைவியை விட அதிகமாக மேக்கப் போட்டுள்ள அட்லீ.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக அறிமுகமாகி பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் தான் அட்லீ. முதல் படமே சூப்பர்ஹிட்.

அதனைத் தொடர்ந்து தளபதியின் தீவிர ரசிகரான அட்லீ விஜய்யுடன் இணைந்து தெறி என்ற படத்தை எடுத்தார். நூறு கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது தெறி. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல் என்ற பட்டத்தைக் கொடுத்தார்.

இந்த முறை 200 கோடி வசூலைக் கொடுத்து தன்னுடைய இயக்குனர் மார்க்கெட்டையும் உயர்த்திக் கொண்டார். பிகில் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் மட்டும் 30 கோடி என்கிறார்கள்.

பிகில் படம் 300 கோடி வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது அந்த படம் தள்ளிப் போவதால் தன்னுடைய மனைவி பிரியாவுடன் பொழுதை கழித்து வருகிறார். இருவரும் காதல் மயக்கத்தில் புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

சமீபத்தில் அட்லீ வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது மனைவியை விட வெள்ளையாக இருப்பது போன்று ரசிகர்களுக்கு தோன்றி உள்ளது போல. முடிந்தவரை இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

atlee-cinemapettai
atlee-cinemapettai

Trending News