வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ராஜமௌலிக்கு டஃப் கொடுக்கும் அட்லீ.. கதை ரெடி, முக்கிய ரோலில் பாலிவூட், கோலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ்!

Atlee: ஒரு மனுஷனுக்கு குரு உச்சத்தில் இருந்தால் எல்லா நல்ல காரியமும் சேர்ந்து நடக்கும் என்று சொல்வார்கள். அது இயக்குனர் அட்லிக்கு தான் கரெக்டாக இருக்கிறது. எந்த சர்ச்சையிலும் சிக்காமல், இதுவரை தோல்வி படங்களே கொடுக்காமல் தன்னுடைய கேரியரை நகர்த்திக் கொண்டிருக்கிறார் அட்லி.

இவரது ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போதும் இது அந்த படத்தின் கதை, இங்கிருந்து சுட்டுட்டாரு என்று ஆதாரத்தோடு சமூக வலைத்தளத்தில் கிழித்து தொங்க விடுகிறார்கள். ஆனால் அட்லியின் சினிமா வாழ்க்கை என்னவோ ஏறுமுகமாக தான் இருக்கிறது.

ராஜமௌலிக்கு டஃப் கொடுக்கும் அட்லீ

அறிமுக படமே சூப்பர் ஹிட், அதைத் தொடர்ந்து மூன்று படங்களும் தளபதி விஜய். அப்படியே யு டர்ன் போட்டு திரும்பினால் பாலிவுட்டில் அறிமுகம். முதல் படமே ஷாருக்கான் ஹீரோ, பெரிய அளவில் பிளாக் பஸ்டர் வெற்றி.

அட்லியின் வளர்ச்சி எல்லோருக்குமே பெரிய ஆச்சரியத்தை தான் கொடுக்கிறது. அதைவிட ஆச்சரியமான அவருடைய புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஷாருக்கான் தொடர்ந்து அட்லி அடுத்து பாலிவுட்டில் சல்மான் கான் படத்தை இயக்க இருக்கிறார்.

அதுவும் வரலாற்றுப் படமாம். பிளாஷ்பேக் மற்றும் இப்போ நடக்கும் கதை என கலந்து இந்த படம் இருக்கப் போகிறது. மேலும் படத்தில் இரண்டாவது ஹீரோவாக கமல் அல்லது ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2025 ஆம் ஆண்டு கோடை காலத்தில் தொடங்குகிறது.

Trending News