ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அட்லீயுடன் இணையும் கமல், பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி.. அட! இதுதான்யா சூப்பர் அப்டேட்

Atlee: புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கணும்னு சொல்லுவாங்க. அதை தான் இயக்குனர் அட்லி செஞ்சி இருக்காரு. அறிமுக படமே கலக்கலான ஹிட். அதைத் தொடர்ந்து மூன்று படங்கள் தளபதி விஜய் கூட என்று குறுகிய காலத்தில் பெரிய வெற்றியைப் பெற்றார் அட்லி.

பெரிய பெரிய இயக்குனர்களே பாலிவுட் கனவுகளோடு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் போது, அதிலும் வெற்றி பெற்றார் அட்லி. ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி என வடக்கும் தெற்குமாக சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்கி ஜவான் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து அட்லி தெலுங்கு டாப் ஹீரோ அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. இதில் ஹீரோயின் யார் என்பது தான் இழுபறியாக இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

அட! இதுதான்யா சூப்பர் அப்டேட்

இந்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாவதற்கு முன்னமே அட்லீயின் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அட்லி உலகநாயகன் கமலஹாசன் உடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போகிறார்.

பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் சல்மான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்போதைய இளம் இயக்குனர்களின் லோகேஷ் கனகராஜ் ரஜினி மற்றும் கமல் என அசத்தி விட்டார்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் நெல்சன் ஒரு சில படங்களிலேயே ரஜினியை வைத்து இயக்கி விட்டார். ஆனால் இவர்களே மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படும் அளவுக்கு அட்லியின் வளர்ச்சி இருக்கிறது. உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இருவரது காம்போவில் ஒரு படம் வருகிறது என்றால் அது கண்டிப்பாக சூப்பர் ஹிட் படமாக தான் அமையும்.

அது மட்டும் இல்லாமல் அட்லி மீது எத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவருடைய படம் இதுவரைக்கும் தோல்வியை தழுவவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

கைவிட்டுப் போன அட்லி அல்லு அர்ஜுனா கூட்டணி

Trending News