Atlee: இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுவது என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு விஷயத்தால் சிக்கி சின்னா பின்னம் ஆகி இருக்கிறார் இயக்குனர் அட்லி.
அட்லியை பொறுத்த வரைக்கும் அவருடைய ஜாதகத்தில் குரு கடந்த சில வருடங்களாகவே உச்சத்தில் தான் இருக்கிறது.
காப்பி அடித்து படம் பண்ணுகிறார் என சுற்றி இருப்பவர்கள் அறைகூவல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அட்லி அம்பானி வீட்டு கல்யாணம் வரைக்கும் தன்னுடைய வளர்ச்சியை நிரூபித்து விட்டார்.
பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றி படங்களே இல்லாமல் இருந்த காலகட்டம். அப்போது நடிகர் ஷாருக்கான் வைத்து ஆயிரம் கோடி வசூல் அள்ளி காட்டினார்.
இதனால் பாலிவுட் உலகில் அவர் மீது ஒரு பெரிய நம்பிக்கை வந்தது. அடுத்து அட்லி இயக்கத்தில் யார் நடிப்பது என பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய ஹீரோக்கள் வரை போட்டி என்று கூட சொல்லலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஆழம் தெரியாமல் காலை விட்டு மொத்தமாக விழுந்து இருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படம் தான் தெறி.
இந்த படம் சத்ரியன் படத்தின் காப்பி என தமிழ் சினிமா ரசிகர்களால் விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் படம் பெரிய அளவில் வெற்றி.
75 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 150 கோடி வசூலித்தது. முதன் முதலில் 150 கோடி வசூலித்த விஜய் படம் இதுதான்.
இதெல்லாம் நமக்கு தேவையா தம்பி சார்?
இதைத்தான் தற்போது பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் அட்லியும் ஒருவர்.
180 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் இன்னும் 50 கோடியை கூட நெருங்கவில்லை. பெரிய அளவில் வணிக ரீதியாக அடிவாங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் அட்லிக்கு ஏன் இந்த வேலை பேசாமல் இங்கேயே இருந்து ஏதாவது ஒரு படத்தைக் காப்பியடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கலாமே என தங்களுடைய கரிசனையை காட்டி வருகிறார்கள்.