செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லாஜிக்கே இல்லாமல் சீனை வைத்த அட்லி.. விழுந்து விழுந்து சிரித்த பட குழு

தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வந்த அட்லி தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அப்படம் உருவாகி கொண்டு இருக்கிறது.

அடுத்த வருட ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சமீபத்தில் அட்லி ஒரு சீரியஸான காட்சியை படமாக்கி இருக்கிறார். பொதுவாக இது போன்ற சீரியஸ் சென்டிமென்ட் காட்சிகளை பார்க்கும்போது படக்குழுவினருக்கு அழுகைதான் வரும்.

Also read:நாளுக்கு நாள் எகிறும் ஜவான் படத்தின் பட்ஜெட்.. அட்லியால் விரயமாகும் பல கோடிகள்

ஆனால் ஜவான் திரைப்படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக அந்த சீரியஸ் காட்சியை பார்த்து அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். ஏனென்றால் அட்லி கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் அந்த காட்சியை காமெடி காட்சி போன்று எடுத்திருக்கிறார்.

அதாவது கதைப்படி தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் தீபிகா படுகோனை காவலர்கள் தூக்கிலிட போவார்கள். அப்போது தீபிகா எதிர்பாராத விதமாக மயங்கி விழுவாராம். இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அங்குதான் ஒரு பயங்கர டுவிஸ்ட் இருக்கிறது.

Also read:மிஷ்கினுக்காக சூட்டிங்கை நிறுத்திய விஜய்சேதுபதி.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

என்னவென்றால் மயங்கி விழுந்த தீபிகாவை பரிசோதிக்கும் டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறுவார்களாம். ஒரு தூக்கு தண்டனை குற்றவாளியை மருத்துவர்கள் முழுமையாக பரிசோதனை செய்த பிறகு தான் அவர்கள் தூக்கு மேடைக்கு வர முடியும். அப்படி இருக்கும் போது அட்லி லாஜிக்கே இல்லாமல் இப்படி ஒரு காட்சியை படமாக்கி இருக்கிறார்.

இதைப் பார்த்து தான் ஒட்டுமொத்த பட குழுவும் விழுந்து புரண்டு சிரித்திருக்கிறது. கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி ஒரு காட்சியை எடுத்த அட்லியை அங்குள்ளவர்கள் அனைவரும் அவருக்கு பின்னால் கிண்டல் அடித்து வருகிறார்கள். மேலும் தயவு செய்து அந்த சீனை மாற்றுங்கள் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

Also read:நயன்-விக்கியின் திருமணத்தை நான் இயக்கவில்லை.. ஆவணப்படம் பற்றி விளக்கமளித்த கௌதம் மேனன்

Trending News