வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அட்லி உருட்டியதில் மிரண்டு போன சன் பிக்சர்ஸ்.. இயக்குனர் சங்கரை மிஞ்சிய சிஷ்யன்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் தான் இயக்குனர் அட்லி. இவர் தளபதி விஜய் நடித்த நண்பன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் சங்கருக்கு உதவிய இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். பின்னர் ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இயக்குனர் பயணத்தை தொடங்கினார் அட்லி.

எந்த ஒரு புது முக இயக்குனர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பாக அட்லிக்கு அடுத்தடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக அட்லி தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக பார்க்கப்பட்டார். இருந்தாலும் இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.

Also Read:மும்பையில் மொத்த வித்தையையும் காட்டும் அட்லீ.. 400, 500 கோடி எல்லாம் மேட்டரே கிடையாது

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கும் பணிகளை தொடங்கினார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியும் இருக்கின்றனர். தற்போது அட்லிக்கு இந்த ஒரு படம் தான் கைவசம் இருக்கிறது. இந்த படத்துக்காக அவருக்கு 30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

சம்பளம் 30 கோடியாக ஆனது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நான்கு ஏரியாக்களின் விநியோக உரிமையையும் அட்லிக்கு கொடுத்திருக்கிறதாம் ஜவான் படக் குழு. இதற்கு இடையில் அட்லி அடுத்து சன் பிக்சர்சுக்கு படம் பண்ண இருக்கிறார். சன் பிக்சர்ஸ் பொருத்தவரைக்கும் எவ்வளவு பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவிலான சம்பளத்தை கொடுக்க மாட்டார்கள்.

Also Read:2 ரிலீஸ் தேதிகளை அறிவித்த அட்லீ.. இந்த வருடம் காத்திருக்கும் டபுள் ட்ரீட்

அட்லி சன் பிக்சர்ஸிடம் பாலிவுட்டில் எனக்கு 30 கோடி சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் நான்கு ஏரியாக்களின் விநியோக உரிமையும் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு சம்பளம் கொடுக்க ஏன் யோசிக்கிறீர்கள் என்று பேரம் பேச கடைசியில் சன் பிக்சர்ஸ் அவர் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி 50 கோடியை சம்பளமாக தற்போது நிர்ணயத்திருக்கிறார்களாம்.

பல வருடங்களாக தமிழில் எந்த படமும் இல்லை என்றாலும் தன்னுடைய வாய் சாமர்த்தியத்தால் சட்டென 50 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிவிட்டார் அட்லி. அதாவது தற்போது தமிழ் சினிமாவில் இவர்தான் 50 கோடி சம்பளம் இயக்குனர் . அவருடைய குருவான இயக்குனர் சங்கருக்கு 50 கோடி சம்பளம் இதுவரை எந்த படத்திற்கும் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:விஜய் எந்த இயக்குனரிடமும் காட்டாத நெருக்கம்.. அட்லீக்காக எப்பவும் கதவை திறந்து வைத்திருக்கும் தளபதி

Trending News