தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி எல்லோருக்கும் தெரிந்த இயக்குனராக முன்னேறினார் இயக்குனர் அட்லி.
அதன் பிறகு நடிகர் விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் என்று வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து எல்லோருக்கும் பிடித்த இயக்குனராக முன்னேறினார்.
அப்போதுதான் அட்லீ அவர்களுக்கு பாலிவுட் கதவு திறந்தது. நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கம் வாய்ப்பை பெற்றார். அது இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்து பான் இந்தியா இந்தியா டைரக்டராக மாறினார்.
தற்போது வருண் தவான் நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் வைத்து பேபி ஜான் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 25 உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
பேபி ஜான் பட குழுவினர் பிரபல டிவி ஷோவில் கபில் சர்மா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது கபில் சர்மா அவர்கள் தயாரிப்பாளர்கள் உங்களை எங்கே என்று தேடுவார்களாமே என்று அட்லியை பார்த்து உருவ கேலி செய்துள்ளார்.
ஆனால் அட்லியோ என்னுடைய முதல் தயாரிப்பாளர் ஏ. ஆர். முருகதாஸ் அவர்கள் தான் அவர் என் தோற்றத்தை பார்க்கவில்லை, என் கதையையும் நான் சொல்லும் விதத்தை மட்டுமே பார்த்தார்.
அதனால் ஒருவர் தோற்றத்தை வைத்து பார்க்காமல் அவர் மனதை வைத்து எடை போடுங்கள் என்று கூறி மூக்கு உடையம்படி பதில் கொடுத்தார்.