இயக்குனர் அட்லீ தமிழில் முதல் முறையாக ராஜா ராணி எனும் படம் எடுத்து ரசிகர்களை பெற்றார். அந்த படம் வேற லெவல் ஹிட் அடித்தது. தொடர்ந்து அவர் பெரிய ஹீரோக்கலை இயக்க ஆரம்பித்தார். அப்படி விஜயை வைத்து மட்டும் மெர்சல், தெறி என்று இரண்டு படங்களை எடுத்து ஹிட் கொடுத்தார்.
இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, ஜவான் எனும் படத்தை ஷாருக்கானை வைத்து எடுத்து, முதல் படத்திலே 1000 கோடி கொடுத்ததால், அவரை பாலிவுட் நடிகர்கள் விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள்.
தற்போது தெறி படத்தின் Remake-ஆன பேபி ஜான் படத்தை முடித்துள்ளார். தற்போது ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படி இருக்க தற்போது அட்லீ ஒரு முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.
‘பேபி ஜான்’ படத்தில் சல்மான் கான் ஒரு கேமியோ ரோல்-ல் நடிக்கிறார். இதற்காக முதலில் அட்லீ சல்மான் கானிடம் கேட்கும்போது, அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே ‘ஓகே சார் ‘ என்று கூறிவிட்டாராம்.
பேபி ஜான் படத்தில் வருண் தவான் கீர்த்தி சுரேஷ், நடிக்க இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் கடைசி காட்சியில் ஒரு கேமியோ கதாபாத்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது..
அப்போது முதலில் ஷாரூக்கானிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். திடீரென்று சல்மான் கானிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது.. அப்போது அவரிடம் கேட்டேன்.. அவர் உடனே ஓகே சொல்லி நடித்தும் கொடுத்தார்.
மேலும் நிச்சயமாக பேபி ஜான் 2 படம் வரும் என்று கூறியிருக்கிறார். இதனால் இவர் தொடர்ந்து இனி ஹிந்தி படம் தான் இயக்கப்போகிறாரா? தமிழ் பக்கம் மொத்தமாக தலை மொழுகிவிட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.