Jawan Twitter Review: அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஜவான் இன்று கோலாகலமாக வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில் நயன்தாரா, விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் பற்றிய தங்கள் விமர்சனங்களை ரசிகர்கள் இப்போது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

முதல் காட்சி ஆரம்பிக்கும் போதே சோசியல் மீடியா களைகட்ட தொடங்கிவிட்டது. அதை தொடர்ந்து படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அட்லியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதிலும் ஷாருக்கான் மொத்த வித்தையையும் இதில் இறக்கி மாஸ் காட்டியுள்ளதாக ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

Also read:
மேலும் அவருடைய அறிமுக காட்சியும், இடைவேளை காட்சியும் ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறது. ஏற்கனவே ட்ரெய்லரை பார்த்து அட்லியின் மேக்கிங் தாறுமாறாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. அதைத் தொடர்ந்து தற்போது படத்தில் ஒவ்வொரு காட்சியும் அனல் தெறிக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் பாலிவுட்டில் தன் அறிமுகத்தை கொடுத்திருக்கும் நயன்தாராவும் தன்னுடைய பங்கை சரியாக செய்திருக்கிறார். அதனாலேயே இப்படம் 700 கோடியை தாண்டி வசூலிக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

Also read:
ஏற்கனவே ஜவான் டிக்கெட் புக்கிங் அரை சதம் அடித்திருந்தது. இதில் தற்போது படத்திற்கான வரவேற்பும் விமர்சனங்களும் எதிர்பாத்ததற்கும் மேலாகவே இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது ஷாருக்கான் தன் முந்தைய படமான பதான் சாதனையை முறியடித்து காட்டி விடுவார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் அட்லி தன்னை பற்றி வந்த பல விமர்சனங்களுக்கும் ஜவான் மூலம் பதில் கொடுத்திருக்கிறார். இவ்வாறாக கொண்டாடப்பட்டு வரும் இப்படம் இனிவரும் நாட்களிலும் இதே வரவேற்பை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
