புதன்கிழமை, ஜனவரி 1, 2025

ஷாருக்கான் படத்துல ஹெலிகாப்டர் சேசிங் இருக்கும் போலயே.. ஆயிரம் கோடிக்கு ஆப்பு வைக்கும் அட்லீ!

சினிமாவில் இயக்குநர் அட்லீயின் வளர்ச்சி அபரிமிதமானது. யாருமே நினைத்துப்பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறார். என்னதான் அட்லீ காப்பியடித்து திரைப்படங்கள் எடுக்கிறார் என சொன்னாலும் அவரது வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.

தமிழில் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூல் செய்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவியது. அதன் விளைவு தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வெறும் நான்கு படங்கள் மட்டுமே இயக்கிய அட்லீக்கு சம்பளம் 30 கோடி என்றால் சும்மாவா. இந்நிலையில் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென பாலிவுட்டுக்கு பறந்துவிட்டார் அட்லீ.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் அட்லீ மனைவி ப்ரியா சமீபத்தில் ஷாருக்கான் படத்திற்காக அட்லி தனது உதவி இயக்குனர்களுடன் டிஸ்கஷனில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ஹெலிகாப்டர் சேசிங் இருப்பது போல காட்சியை அவர் தன்னுடைய உதவி இயக்குனர்களுக்கு விலகி கொண்டிருப்பது போல் தெரிகிறது. தமிழில் சும்மாவே தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட செலவு செய்து விடுவார். பாலிவுட் போனால் சும்மா இருப்பாரா.

atlee-next-movie-discussion
atlee-next-movie-discussion

தமிழிலேயே 100 கோடி 200 கோடி செலவு வைக்கும் அட்லீ பாலிவுட்டில் ஆயிரம் கோடி செலவு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். அட்லீ மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News