ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ அடுத்த படமே தளபதி விஜய் உடன் கைகோர்த்தார். தொடர்ந்து இதே கூட்டணியில் வெளியான மூன்று படங்களும் வெற்றி அடைந்தது. ஆனால் அட்லீ மீது தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
அதாவது அவருடைய அறிமுக படமான ராஜா ராணியில் தொடங்கி தற்போது உருவாகி வரும் ஜவான் வரை ஒரு விஷயம் அட்லீயை பின்தொடர்கிறது. அதாவது அட்லி தொடர்ந்து மற்ற படங்களை காப்பி அடித்து தன்னுடைய படத்தை இயக்குவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த அட்லீ, எல்லாவிதமான கதைகளும் வந்துவிட்டது. நாம் எப்படி படம் எடுத்தாலும் அதன் சாயல் முன்பு வெளியான படங்களில் இருக்கும் என காப்பியடிப்பதற்கு அட்லீ ஒரு கதையை உருட்டி இருக்கிறார். இது குறித்து மகிழ்திருமேனியும் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதாவது சினிமாவுக்கு என்ற ஒரு கற்பனை உள்ளது. கதை ஒன்றாக இருந்தாலும் இயக்குனரின் கற்பனைக்கு ஏற்ப படத்தை எடுக்க வேண்டும். எப்போதுமே அடுத்த படத்தின் சாயல் தங்களது படங்களில் இருக்கக் கூடாது என்பதை மகிழ்திருமேனி விலகி உள்ளார்.
Also Read: விஜய்காக வரிசை கட்டி நிற்கும் 6 இயக்குனர்கள்.. அட்லீக்கு கொடுத்த அல்வா!
அதுமட்டுமின்றி மகிழ்திருமேனி ஒரே ஜானரில் நிறைய படங்கள் எடுத்திருந்தாலும், ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் ஒற்றுமை சற்றும் இருக்காது. அவ்வாறு தனது படங்களில் தொடர்ந்து வித்தியாசம் காட்டி வருகிறார். மேலும் அடுத்ததாக அஜித்துடன் மகிழ்திருமேனி கூட்டணி போட இருக்கிறார்.
அதாவது அஜித்தின் இயக்குனர் மகிழ்திருமேனி புதிய பரிமாணத்துடன் சினிமாவை பார்த்து வரும் நிலையில் அட்லீ பழைய கதையையே உருட்டி வருகிறார். இது போன்ற இயக்குனர்களை பார்த்தாவது அட்லி கத்துக்கொண்டு புதுவிதமான படங்களை இயக்குகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Also Read: எதிர்பாராத கூட்டணியில் ஏகே 62.. விக்னேஷ் சிவனை தொடர்ந்து மகிழ்திருமேனிக்கும் போட்ட பட்ட நாமம்