திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மும்பையில் மொத்த வித்தையையும் காட்டும் அட்லீ.. 400, 500 கோடி எல்லாம் மேட்டரே கிடையாது

கடந்த சில வருடங்களாகவே மும்பையில் டேரா போட்டிருக்கும் அட்லி அடுத்த கட்ட பிளானை மிகவும் பிரம்மாண்டமாக போட்டிருக்கிறாராம். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் ஹிந்தி திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது அட்லிக்கும் பெரும் நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.

இதன் மூலம் அவர் அடுத்ததாக எடுக்க இருக்கும் படத்தையும் பல கோடி பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அதாவது அவர் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய் அதை முடித்துவிட்டு அட்லீயுடன் இணைகிறார். ஆனால் அதற்கான வேலைகள் அனைத்தும் இப்போதே ஆரம்பமாகிவிட்டதாம்.

Also read: 2 ரிலீஸ் தேதிகளை அறிவித்த அட்லீ.. இந்த வருடம் காத்திருக்கும் டபுள் ட்ரீட்

ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. அதனாலேயே அட்லி அடுத்த படத்தை வேற லெவல் வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம். அந்த வகையில் இப்படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனென்றால் தயாரிப்பாளர் ஒரு பட்ஜெட்டை போட்டால் அதைவிட பல மடங்கு செலவை இழுத்து விடுவது தான் அட்லியின் வேலை. இது பற்றி ஏற்கனவே பல புகார்கள் அவர் மீது இருக்கிறது. ஆனாலும் பிரம்மாண்டமாக இருக்கிறேன் என்ற பெயரில் தயாரிப்பாளர் காசை கரியாக்கும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார் அட்லீ.

Also read: விஜய் எந்த இயக்குனரிடமும் காட்டாத நெருக்கம்.. அட்லீக்காக எப்பவும் கதவை திறந்து வைத்திருக்கும் தளபதி

அதனால் விஜய் உடன் கூட்டணி அமைக்கும் இந்த படம் 600 கோடி வரை பட்ஜெட் ஆகிவிடும் என்று கூறுகிறார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஏனென்றால் தற்போது மும்பையில் பரபரப்பாக வேலை செய்து வரும் அட்லி ஜவான் திரைப்படத்தின் ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்து வருகிறாராம். ஏனென்றால் இந்த படத்தில் அட்லி தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறாராம்.

அதனாலேயே அவர் தன் நெருங்கிய வட்டாரத்தில் இந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும் என் லெவலை அப்புறம் பாருங்கள் என்று பெருமை பேசி வருகிறாராம். அது மட்டுமல்லாமல் 400 கோடி 500 கோடி பட்ஜெட் எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே கிடையாது. அதைவிட பிரம்மாண்டமான படத்தை நான் முடித்துக் காட்டுவேன் என்று தெனாவட்டாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read: தளபதி-67 ரிலீஸ் தேதியை லாக் செய்த லோகேஷ்.. விஜய்க்கு 2023 பிளாக்பஸ்டர் ஹிட் கன்ஃபார்ம்

Trending News