திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி காட்டும் நெருக்கத்தால் தலை கால் புரியாமல் ஆடும் அட்லீ.. சன் பிக்சர்ஸை கதிகலங்க வைக்கும் சம்பளம்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ முதன்முறையாக ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், இவருக்கு அடுத்த படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்த தெறி படம் கொஞ்சம் பழைய மாசாலா கலந்த கதை என்றாலும் சூப்பர் ஹிட் அடித்தது.

அதன் பின்னர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அட்லீயின் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், தளபதி விஜய் அதையெல்லாம் கண்டு கொள்ளாது அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை வழங்கினார். மெர்சல், பிகில் என இவர்கள் இருவரது கூட்டணியில் படங்களும் வெற்றி பெற்றன. பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது கூட அட்லீ ரொம்ப உரிமையாக விஜய்யை தன்னுடைய அண்ணன் என்று கூறினார்.

Also Read:அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் தளபதி.. கனவு படத்திற்காக விஜய்க்கு போட்ட கொக்கி

இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருப்பது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் தெரிந்த ஒன்றுதான். அதனால் தான் அட்லீ மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தளபதி விஜய் அவரை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கொடுத்து இன்று உச்ச இயக்குனராக மாற்றி இருக்கிறார். இதன் மூலம் தான் அவருக்கு ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

தளபதி விஜய் அவருடைய வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். தளபதி தன்னுடைய அடுத்த படத்தை யாருடன் பண்ண போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது விஜய் ரசிகர்களிடையே இருக்கிறது. வீரசிம்மா ரெட்டி திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனரும் அவருக்கு கதை சொல்லியிருக்கிறார்.

Also Read:லாரன்ஸ் பிள்ளைகளுக்கு விஜய் செய்யும் உதவி.. விரைவில் இணைய உள்ள கூட்டணி

விஜய் அவருடைய ஆஸ்தான இயக்குனரான அட்லீயுடன் படம் பண்ண வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் கனவாக இருக்கிறது. இந்த கூட்டணியில் மீண்டும் படம் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. எப்போதுமே தயாரிப்பு நிறுவனங்களிடம் ஹீரோக்கள் தான் டீல் பேசுவார்கள். ஆனால் இங்கு அட்லீ தான் டீல் பேசி வருகிறாராம்.

அதாவது சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தன் அண்ணனுக்கும், தனக்கும் சேர்த்து மொத்தம் 200 கோடி தந்துவிட சொல்கிறாராம். இந்த 200 கோடியில் விஜய் தனக்கு எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்து கொண்டு மீதி அட்லீக்கு கொடுப்பதாக பிளானாம். விஜய் காட்டிய ஓவர் நெருக்கத்தால் இன்று அட்லீ தயாரிப்பாளர்களிடம் டீல் பேசும் அளவிற்கு வந்திருக்கிறார்.

Also Read:தளபதிக்கு நெருக்கடி கொடுக்கும் லோகேஷ்.. குளு குளுன்னு இருந்தபோது இனிச்சி கிடந்ததோ!

Trending News