வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

யோகி பாபு சீனை வெட்டி தூக்கிய அட்லி.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்

Yogi Babu- Jawan: பதான் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாருக்கானுக்கு மீண்டும் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கிறது ஜவான் படம். மேலும் நடிகை நயன்தாரா இருமுகன் படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பும் ரசிகர்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

படத்தில் நடித்த முக்கியமான கேரக்டர்கள் எல்லாம் தங்களுடைய நடிப்பு திறமையால் எஸ்கேப் ஆகிவிட, இப்போது மொத்தமாய் ஆடு போல் தலையை கொடுத்து சிக்கி இருப்பது இயக்குனர் அட்லி தான். படம் ரிலீசானதில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என ஒவ்வொரு படங்களின் பெயராக, இதிலிருந்து தான் கதை காப்பி அடிக்கப்பட்டு இருக்கிறது எனநெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Also Read:சத்யராஜின் இந்த பிளாப் படத்தின் கதையை சுட்ட அட்லி.. ஜவானால் தலைவலியில் ஷாருக்கான்

அட்லி என்றாலே காப்பி தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். எவ்வளவு பில்டப் கொடுத்தாலும், மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்கலையே என்பது போல், இந்த காப்பி பிரச்சனை அவர் பாலிவுட் சென்றால் கூட ஓய்ந்த பாடில்லை. இனி அவர் ஹாலிவுட் சென்றாலும் இந்த சர்ச்சை அவரை சுற்றிக்கொண்டு தான் இருக்கும் போல.

நேற்றையிலிருந்து இந்த சர்ச்சை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, மீண்டும் ஒரு அக்கப்போரை தொடங்கி இருக்கிறார்கள். படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இசை வெளியீட்டு விழாவின் போது அவர் பேசியது கூட பயங்கர வைரலாகியது. தற்போது அவர் நடித்த காட்சிகள் மொத்தமும் நீக்கப்பட்டு விட்டதாக படம் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

Also Read:வழக்கம்போல வேலை காட்டிய அட்லி.. விஜய்க்கு பயத்தை காட்டியதால், சங்கு ஊதியாச்சாம்

ஜவான் படம் இந்தி வெர்ஷனில் யோகி பாபு நடித்த மொத்த காட்சிகளையும் நீக்கி இருக்கிறார்கள். தற்போது இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. எதற்காக இந்த காட்சிகள் இந்தியில் மட்டும் நீக்கப்பட்டது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஒரு பக்கம் இதற்காக ரசிகர்கள் கொந்தளித்தாலும், மறுபக்கம் அவர் தமிழில் வந்த காட்சிகளே சொல்லும்படி இல்லை, இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என சொல்லி வருகிறார்கள்.

காமெடியன் மற்றும் கதாநாயகன் என படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்ததே பெரிய விஷயம். அட்லியை நம்பியதற்கு இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையை பார்த்து விட்டார். ஏற்கனவே இது போல தெறி படத்தில் யோகி நடித்த காட்சிகள் நீக்கப்பட்டிருந்ததாக அவர் ஜவான் இசை வெளியீட்டு விழாவில் சொல்லியிருந்தார்.

Also Read:யாரு சாமி நீ, ஜவான் இத்தனை படங்களின் காப்பியா.? ஷாருக்கான் தலையில் ரெட் சில்லியைஅரைத்த அட்லி

Trending News