திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாலிவுட்டிலும் வேலையை காட்டிய அட்லி.. விஜயகாந்த் படத்தால் ஷாருக்கானுக்கு வந்த பிரச்சினை

தமிழில் பல திரைப்படங்களை இயக்கியிருக்கும் அட்லி தற்போது பாலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறார். அங்கு அவர் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதை விஜயகாந்த் பட கதை தான் என்ற ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் கேப்டன் விஜயகாந்த் கடந்த 2006 ஆம் ஆண்டு பேரரசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். உதயன் இயக்கியிருந்த அந்த திரைப்படத்தை ரோஜா கம்பைன்ஸ் தயாரித்து இருந்தது.

Also read :சரிந்து கிடக்கும் பாலிவுட்டை தூக்கி நிறுத்த போகும் பதான் பட டீசர்.. விஸ்வரூபம் எடுத்துள்ள ஷாருக்கான்!

இந்த திரைப்படத்தின் கதை உரிமை 7th சேனல் மாணிக்கம் நாராயணன் வசம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் ஜவான் திரைப்படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு திரைப்படத்தின் கதை தான் என்று புகார் அளித்துள்ளார்.

இது தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னதாகவே அட்லியின் மீது இது போன்ற பல புகார்கள் இருக்கிறது. சொல்லப்போனால் ரசிகர்கள் அவரை காப்பி டைரக்டர் என்று தான் கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு அவருடைய இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் பழைய திரைப்படங்களின் சாயலை ஒத்திருக்கும்.

Also read :லாஜிக்கே இல்லாமல் சீனை வைத்த அட்லி.. விழுந்து விழுந்து சிரித்த பட குழு

அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் மணிரத்தினத்தின் மௌன ராகம் திரைப்படத்தை போன்று இருந்தது. அதேபோன்று விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படமும் சத்ரியன் திரைப்படத்தை போன்று இருந்தது. இப்படி அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரையே வைத்து படம் இயக்கும் அளவுக்கு அவர் உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் அந்த கதையும் காப்பியடிக்கப்பட்ட கதை தான் என்ற விஷயம் ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. ஏற்கனவே ஜவான் திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே சில பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் இந்த கதை திருட்டு புகார் ஷாருக்கானுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. இது குறித்து அட்லி தரப்பிலிருந்து எந்தவிதமான விளக்கமும் இதுவரை வரவில்லை.

Also read :பிரேமலதாவிற்கும் முன் விஜயகாந்த் காதலித்த நடிகை.. குழிபறித்த நட்பு, கறாராக பேசி பிரித்துவிட்ட மனைவி

Trending News