Director Atlee: எந்த வேலையை எடுத்துக்கிட்டாலும் ஹார்ட் வொர்க் மற்றும் ஸ்மார்ட் வொர்க் என்று இரண்டு வகை உண்டு. ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செஞ்சு முன்னேற முடியாதவங்க இருக்காங்க. என்ன வேலை செய்றாங்கன்னு தெரியாது, ஆனா கொஞ்ச நாள்ல பெரிய இடத்துக்கு வந்துருவாங்க. இது ஸ்மார்ட் வொர்க்.
இதுல இந்த இரண்டாவது வகை தான் இயக்குனர் அட்லி. மௌன ராகம் படத்தின் அட்ட.காபி தான் ராஜா ராணி என்று பல விமர்சனம் சொல்லப்பட்டது.
ஆனால் அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து மெர்சல், தெறி, பிகில் என அத்தனை படங்களுமே பழைய படங்களின் காப்பி என கழுவி ஊற்றப்பட்டது. நீங்க இப்படியே பேசிக்கிட்டே இருங்க என்று சொல்லிவிட்டு அட்லி பாலிவுட் பறந்தார்.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜவான் என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். அப்போதும் அட்லி காப்பி அடித்து தான் இந்த படத்தை எடுத்தார் என பலவிமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அவர் அசால்டாக அம்பானி வீட்டு கல்யாணம் வரை போய்விட்டு வந்து விட்டார்.
பாலிவுட் உலகமே அட்லியின் அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது, அவர் தெலுங்கு சினிமா பக்கம் தாவி இருக்கிறார். புஷ்பா படம் மூலம் உலக அளவில் ட்ரெண்டான அல்லு அர்ஜுன் உடன் அட்லீ இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இதில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
பாட்ஷாவாக ஆன அட்லி
இந்த படத்திற்காக 60 கோடி சம்பளமாக பேசியிருக்கிறார். சம்பளம் எல்லாம் கூட ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த படத்திற்காக. அட்லி பேசிய டீல் தான் இப்போது பெரிய விஷயமாக இருக்கிறது. அதாவது படம் ரிலீஸ் போனதும் வரும் லாபத்தில் தனக்கு பாதி ஷேர் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதிரி ஷார் கேட்டு படம் நடிப்பது சாதாரணமாக நடக்கும் விஷயம். ஜெயிலர் படத்திலும் அந்த டீல் பேசி தான் அவர் இணைந்தார். இப்ப ரஜினி பாணியில் அட்லி சினிமாவில் இப்படி சம்பாதிக்கும் ஒரு புதிய ரூட்டை எடுத்திருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும் போது திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு திடீர்னு அடித்ததா அதிர்ஷ்டம் என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது.