வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிப்ரவரிக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அட்லீ.. ஜனவரியிலேயே பிறந்த வாரிசு

வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தற்போது பாலிவுட் பக்கம் சென்று உள்ளார். அங்கு சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் படத்தை கடந்த சில வருடங்களாக அட்லீ இயக்கி வருகிறார். ஜவான் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட மூன்று நான்கு வருடங்களாக ஜவான் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அட்லீ செம ட்ரீட் கொடுக்க உள்ளார். இந்நிலையில் சின்னத்திரை நடிகையான பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு அட்லீ காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு பிரியா இருக்கும் அறிவிப்பை அட்லீ அறிவித்தார்.

Also Read : அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்

அதுமட்டுமின்றி பிரியா அட்லீக்கு சமீபத்தில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய் பங்கு பெற்றார். மேலும் சமீபத்தில் பிப்ரவரி மாதத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அட்லீ பதிவிட்டு இருந்தார். அதாவது மருத்துவர்கள் பிரியாவுக்கு பிப்ரவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் ஜனவரி கடைசி நாளான இன்று 31ஆம் தேதி அட்லீ மற்றும் பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் அட்லீ பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது என்று அட்லீ கூறி உள்ளார்.

Also Read : மும்பையில் மொத்த வித்தையையும் காட்டும் அட்லீ.. 400, 500 கோடி எல்லாம் மேட்டரே கிடையாது

இதை அறிந்த அட்லீ ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பாலிவுட்டிற்கு சென்ற இடம் அட்லீக்கு வாரிசு பிறந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அடுத்ததாக அட்லீ ஜவான் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

atlee-priya-cinemapettai

Also Read : 2 ரிலீஸ் தேதிகளை அறிவித்த அட்லீ.. இந்த வருடம் காத்திருக்கும் டபுள் ட்ரீட்

Trending News