ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யை கழட்டிவிட்டு கமலுக்கு கொக்கிப்போடும் அட்லீ.. ஜவான் ரிலீசுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அலப்பறை

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுக்கோனே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இம்மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசான  ட்ரைலரில் ஆக்ஷன் மாஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற்றது.

அப்பா, மகன் கதாபாத்திரத்தில் ஷாருக்கானும், வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் தீபிகா படுக்கோனே நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றதையடுத்து, அட்லீ, ஷாருக்கான், அனிரூத் உள்ளிட்ட பலர் மேடையேறி ஜவான் படம் குறித்து பேசினர்.

Also Read: பணத்தாசையில் நயன்தாரா எடுத்த விபரீத முடிவு.. ஜவான் ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு சம்பவமா என ஷாக்கான அட்லீ?

அப்போது அட்லீ பேசும்போது, தான் இந்த படத்தை இயக்க முழுக்க,முழுக்க காரணம் என்னுடைய அண்ணன் தளபதி விஜய் தான் என கூறினார். மேலும் பேசிய அவர் விஜய் இல்லையென்றால் நான் ஷாருக்கானை வைத்து படம் பண்ணிருக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்தார். இவரை தொடர்ந்து பேசிய ஷாருக்கான், நான் தமிழில் மணிரத்னத்துடன் உயிரே படத்திலும், சூப்பர்ஸ்டாருடன் ரா ஒன் படத்திலும் நடித்துள்ளேன். அதேபோல, நான் எனது நண்பன் கமலின் ஹேராம் படத்தில் தான் கடைசியாக தமிழில் நடித்த படம் என்று கூறினார்.

இவருடைய இந்த பேச்சு அட்லீக்கு தற்போது புது ஐடியாவை வரவழைத்துள்ளது. ஏற்கனவே இயக்குனர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை கமலஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அட்லீக்கு கமலை வைத்து படம் பண்ணவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்த நிலையில், தற்போது கமல்,ஷாருக்கானை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க அட்லீ ஆயத்தமாகி வருகிறார்.

Also Read: ஷாருக்கானின் சில்மிஷத்தால் 4 வருடங்களாக இழுத்தடித்த ஜவான் படம்.. அட்லீயை வச்சு செய்த சூப்பர் ஸ்டார்

இயக்குனர் அட்லீ, ஜவான் படம் முடிந்த கையோடு மீண்டும் நான்காவது முறையாக விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஷாருக்கானை வைத்து கமலுடன் படம் இயக்க அட்லீ பிளான் போட்டுள்ளது விஜய் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளிக்கிறது.

இன்னும் ஜவான் படம் ரிலீசாக மூன்று நாட்கள் உள்ள நிலையில் அதற்குள்ளாக அட்லீ தன் அடுத்த படத்தில் ஷாருக்கான், கமலை வைத்து யோசித்து வருவது சற்று ஓவராக உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் ஜவான் படம் ஹிட்டானால் தான் விஜய்யே அட்லீக்கு வாய்ப்பு கொடுக்கும் நிலையில் உள்ளதால், கண்டிப்பாக ஜவான் தோல்வியடைந்தால் அட்லீ பக்கம் ஷாருக்கான் தலை வைத்துக்கூட படுக்கமாட்டார்.

Also Read: ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய ஜவான்.. அட்வான்ஸ் புக்கிங்கில் படைத்த வசூல் சாதனை

Trending News