ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அட்லியால் கோலிவுட் வேண்டான்னு பாலிவுட்டிற்கு பொட்டிய கட்டின நடிகர்.. கமலுக்கு நடந்ததெல்லாம் மறந்திருச்சு போல

Atlee’s advice for an actor going to Bollywood: ‘எனக்கு தமிழ் சினிமாவே வேண்டாம்’ என்று ஹிந்திக்கு போன ஆல்ரவுண்டர் ஹீரோ, இப்போ அங்கேயே செட்டிலாக பிளான் பண்ணி விட்டார். இதற்கு காரணம் பல மடங்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்ததால், அதுக்கெல்லாம் ஆசைப்பட்டு தான் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் செட்டிலாக முடிவெடுத்திருக்கிறார்.

பணம்னா பிணமே வாயை பிளக்கும் போது, மனிதர்கள் எல்லாம் எம்மாத்திரம். தமிழில் ஹீரோ, வில்லன், வயதான கேரக்டர், திருநங்கை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பிச்சு உதற கூடியவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சுட்டார்.

இவர் ஹிந்தியில் கத்ரீனா கைஃப்க்கு கதாநாயகனாக மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. இதில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப்-க்கு லிப் லாக் கொடுத்ததை பார்த்த தமிழ் ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.

Also Read: 50 வருடமா சினிமாவிற்காக ஓடிக்கொண்டிருக்கும் 5 நடிகர்கள்.. கொல செய்ய நினைத்தவரையே கொண்டாடிய கமல்

அட்லி கொடுத்த அட்வைஸ் பாலிவுடிற்கு செல்லும் நடிகர்

‘இந்த மனுஷனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்று கமெண்ட் அடித்தனர். இந்த படம் ஹிட்டானால் இனிமேல் ஹிந்தி படங்களுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்தி நடிக்க விஜய் சேதுபதி பிளான் பண்ணி இருக்கிறார். இது அட்லி கொடுத்த அட்வைஸ் தான். அவர் ஷாருக்கான், நயன்தாராவை வைத்து பாலிவுட்டில் ஜவான் படத்தை எடுத்து ஹிட் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி நடிகர்களை வைத்து தொடர்ந்து படம் எடுக்க தீவிரம் காட்டுகிறார். தமிழில் குறைந்த சம்பளத்தை வாங்கிட்டு, குண்டு சட்டியில் குதிரை ஓட்டறதுக்கு பதிலா ஹிந்தில கை நிறைய சம்பளம் வாங்கலாம் என்று அட்லியை தொடர்ந்து விஜய் சேதுபதியும் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

ஆல்ரெடி 80களில் கமலஹாசன் பெரிய கனவுடன் ஹிந்தியில் நிறைய படங்களை நடித்து படு தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்ததால் அந்தப் பக்கமே உலக நாயகன் இப்ப தலை வச்சு படுக்க மாட்டேங்கிறாரு. அவருக்கு நடந்ததெல்லாம் மறந்துட்டாங்க போல, இதெல்லாம் காசுக்காக தான் நடக்கிறது. மேரி கிறிஸ்மஸ் படத்திற்கு கிடைக்கிற வரவேற்பை பார்த்த பிறகு, விஜய் சேதுபதி தமிழ் படத்துல கமிட் ஆகலாமா வேண்டாமான்னு முடிவெடுக்க இருக்கிறார்.

Also Read: முதல் காதலியை இழந்த கமல்.. காதலில் ஆரம்பித்து மாமியாராக முடிந்த கதை

Trending News