ஜவான் படத்தால் அட்லீ ஏற்படுத்திய திகில்.. சிபாரிசுக்கு வந்த தளபதிக்கு போட்ட பெரிய கும்பிடு

தமிழில் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வந்த அட்லீ பாலிவுட்டில் ஜவான் படத்தை 5 வருடங்களாக உருட்டி வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜவான் படத்தால் மிகப்பெரிய தலைவலியை ஷாருக்கான் சந்தித்திருக்கிறார்.

அதாவது இந்த படத்தை ஷாருக்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். அவர் நினைத்ததை விட பட்ஜெட் கைமீறி சென்று விட்டது. பொதுவாக அட்லி தமிழ் சினிமாவிலேயே 100 கோடி பட்ஜெட் என்றால் 200 கோடியை தாண்டி எடுக்கக் கூடியவர். இங்கே இப்படி என்றால் பாலிவுட்டில் சொல்லவா வேண்டும்.

Also Read : விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

அங்கு சென்ற பின்பு அதிக செலவழிக்கும் பழக்க வழக்கம் அவரிடம் நிறைய வந்துவிட்டது. மேலும் தமிழ் படம் எடுப்பதில் நிறைய செலவு வைக்கும் இயக்குனர்கள் என்ற பட்டியலில் அட்லி பெயரும் உள்ளது. போதாக்குறைக்கு பாலிவுட்டில் செலவழித்து பழகியவருக்கு தமிழ் சினிமாவில் அதிக செலவு வைப்பார் என தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள்.

ஆனால் செல்ல தம்பி அட்லீகாக விஜய் பல தயாரிப்பு நிறுவனம் இடம் பேசி உள்ளது. ஆனால் யாரும் செவி சாய்த்த பாடில்லையாம். கடைசியாக ஏஜிஎஸ் நிறுவனத்திடமும் விஜய் சிபாரிசுக்கு போய் உள்ளார். ஆனால் அந்நிறுவனம் பெரிய கும்பிடு போட்டு அட்லீ வேண்டாம் வெங்கட் பிரபுவை வைத்து படம் இயக்கலாம் என்று கூறிவிட்டனர்.

Also Read : இவ்வளவு சம்பளம் நம்மளால முடியாது.. விஜய் கால் சீட் கொடுத்தும் பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்

அட்லீ நிறைய செலவு வைப்பார் என்பது மட்டுமல்லாமல் இந்த நிறுவனத்திற்காக ஏற்கனவே அவர் இயக்கிய பிகில் படத்தால் ஏஜிஎஸ் பலகோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. இதையும் கருத்தில் கொண்டு தான் தளபதி 68 இல் அட்லீ வேண்டாம் என்று விஜய்யிடம் கராராக இந்நிறுவனம் சொல்லிவிட்டது.

வேறு வழியில்லாமல் விஜய்யும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவிலும் தற்போது அட்லீக்கு வாய்ப்பு இல்லாததால் அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்றால் குழப்பத்தில் உள்ளார். மேலும் பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற திட்டமும் அட்லீக்கு இருக்கிறதாம்.

Also Read : தேரை இழுத்து தெருவில் விட்ட அட்லீ.. விஜய்யிடம் மன்றாடி காரியத்தை சாதித்த தயாரிப்பு நிறுவனம்