வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எதிர்பார்ப்பை தூண்டிய அட்லீ படத்தின் முதல் நாள் வசூல்.. பதானை தொடர்ந்து வேட்டைக்கு தயாராகும் ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூன் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.

பல வருடங்களாக இழுத்தடித்து வந்த இப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பதில் பாலிவுட் ரசிகர்கள் ஏக போக சந்தோஷத்தில் இருக்கின்றனர். அதனாலேயே இப்போது இப்படம் பற்றிய செய்திகளை அவர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

Also read: அட்லி பட ஹீரோவுக்கு 1000 கோடி வசூல்ன்னு சொன்னாங்க.. தூள் தூளாக உடைந்த கனவு கோட்டை

அது மட்டுமல்லாமல் ரிலீஸ் நாளை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்ற கருத்துக் கணிப்பு இணையதளத்தையே தெறிக்க விட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் முதல் நாளிலேயே இந்திய அளவில் 70 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாலிவுட் திரையுலகில் மட்டும் 50 கோடியை முதல் நாளிலேயே தட்டி தூக்கி விடும் எனவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Also read: பதான் பட்ஜெட்டையே சம்பளமாக வாங்கிய ஷாருக்கான்.. பதறிப்போன அட்லி பட தயாரிப்பாளர்

அந்த வகையில் பதான் படத்தின் மூலம் மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்திய ஷாருக்கான் அடுத்த வேட்டைக்கும் தயாராகி இருக்கிறார். இந்த வருட ஆரம்பத்தில் வெளியான பதான் 225 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து பாலிவுட் திரையுலகையே மிரட்டியது.

அதைத்தொடர்ந்து ஜவான் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது மற்ற முன்னணி நடிகர்களை கொஞ்சம் மிரட்டி தான் விட்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் ரிலீசான சில நாட்களிலேயே போட்ட பட்ஜெட்டை எடுத்து விடும் என்று பட குழுவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் அட்லி பாலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் தட்டித் தூக்கி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: ஷாருக்கானால் பதட்டத்தில் இருக்கும் சல்மான்கான்.. 4 இயக்குனர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட சம்பவம

Trending News