திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜவானால் எகிறிய அட்லீயின் டிமாண்ட்.. ஆரம்பிக்கும் முன்பே லாக் செய்த சன் பிக்சர்ஸ், அதுக்குனு இத்தனை கோடியா.!

அட்லீ தமிழில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அங்கு முதல் படமே சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் படம் கிடைக்க ஜவான் படத்தை கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக எடுத்து வருகிறார். இப்போது அந்த படத்திற்கு விடிவு காலம் வந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்த சூழலில் ஜவான் பிரமோஷனுக்காக முதல் பாடல், டிரைலர் போன்றவை வெளியாகி வருகிறது. இவை அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. பாலிவுட் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் ஜவான் படத்திற்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read: ஜவான் கட்டி விட்ட சலங்கை.. சம்பளத்தை உயர்த்தி ஆடாத ஆட்டம் ஆடும் அட்லி

மேலும் ஏற்கனவே ஷாருக்கானின் பதான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த லிஸ்டில் ஜவான் படமும் இணையும் என பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. ஆகையால் அட்லீயின் மார்க்கெட் பாலிவுட்டில் வளர வாய்ப்பு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த வாய்ப்புகள் பாலிவுட்டில் அட்லீக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அட்லீ வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகையால் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் இவரை எப்படியாவது லாக் செய்து விட வேண்டும் என்று முனைப்பில் செயல்பட்டு வருகிறார்கள். இதில் முதல் ஆளாக சன் பிக்சர்ஸ் துண்டை போட்டு அட்லீயை லாக் செய்து வைத்துள்ளது.

Also Read: அட்ட காப்பி அடித்த அனிருத்.. அட்லியால் சர்ச்சையில் சிக்கிய ஜவான்

அதாவது அட்லீக்கு அட்வான்ஸ் தொகையாக 10 கோடியை சன் பிக்சர்ஸ் கொடுத்துள்ளதாம். மீண்டும் தமிழில் அட்லீ படம் எடுத்தால் முதலில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தை அட்லீ தயாரிக்கிறார்.

இன்னும் சில காலம் ஹிந்தி சினிமாவில் தான் அட்லீ பயணிக்க இருக்கிறார் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கேரக்டரை முழு படமாக அட்லீ எடுக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். அட்லீக்கு இருக்கும் டிமாண்டால் இப்போது இந்த படம் உருவாகுமா என்பதே சந்தேகம்தான்.

Also Read: மொக்கையான வரிகளில் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தமிழில் அட்லீ-அனிருத் கூட்டணி ஜெயிக்குமா?

Trending News