சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

யாரு சாமி நீ, ஜவான் இத்தனை படங்களின் காப்பியா.? ஷாருக்கான் தலையில் ரெட் சில்லியைஅரைத்த அட்லி

Jawan: ஏம்பா ஒரு பெரிய மனுஷன இப்படியா ஏமாத்துறது அப்படின்னு அட்லியை பார்த்து இப்ப எல்லாரும் கேட்கும் நிலை வந்துடுச்சு. இதுக்கு முக்கிய காரணம் ஜவான் படத்தை பத்தி இப்ப வந்துட்டு இருக்குற விமர்சனங்கள் தான்.

முதல் காட்சி முடிந்ததுமே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பல கருத்துக்கள் வெளிவந்தது. ஆனா இப்ப அது அப்படியே உல்டாவா மாறி ஷாக் கொடுத்து இருக்கிறது. ஏனென்றால் ஜவான் படத்தில் பல தமிழ் படங்களின் சாயல் இருக்கிறது.

Also read: காப்பி கதைக்கு பா ரஞ்சித், லோகேஷை வைத்து பஞ்சாயத்தை முடித்த அட்லி.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

அதிலும் கடந்த அஞ்சு வருஷமா நாம் பார்த்து சலிச்சு போன விவசாய சம்பந்தப்பட்ட கதை இப்பதான் ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் ஓய்ந்து போய் இருக்கிறது. அதை அப்படியே ஹிந்தி பக்கம் கொண்டு போய் சங்கர், ஏ ஆர் முருகதாஸ் பட கதையையும் மிக்ஸ் செய்து ஜவான் படத்தை எடுத்திருக்கிறார் அட்லி.

அதில் அரசு துறையில் நடக்கும் ஊழல் அதை குறிப்பிட்ட சில மணி நேரங்களில் சரி செய்வது என போர் அடிக்கும் சமாச்சாரமும் இருக்கிறது. அந்த வகையில் ரமணா, சர்க்கார், அஜித்தின் ஆரம்பம் போன்ற 23 படங்களின் வாடை வீசுகிறதாம்.

Also read: பெரிய ஓபனிங் இல்லாத ஜவான் படம் .. ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே ஒதுக்கப்படும் ஷாருக்கான்

எப்படி என்றால் ஜவான் ஆயுத ஊழல் பற்றிய கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று தான் ஆரம்பம் படமும் ராணுவ உடை ஊழல் பற்றிய கதையாக இருந்தது. அதைப்பற்றி கூறிவரும் ரசிகர்கள் 1985-ல் ஆரம்பித்து இப்போது வந்த ஜெயிலர் வரை அனைத்து படங்களையும் கலந்து எடுத்திருக்கிறார் அட்லி என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதனால் பாவம் ஷாருக்கான் நிலைமை தான் பரிதாபகரமாக மாறி இருக்கிறது. கஷ்டப்பட்டு கோடி கணக்கில் பணத்தை போட்டு படம் எடுத்துவிட்டு இப்படி ஒரு சோதனையையும் அவர் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அட்லி அவர் தலையில் நன்றாக ரெட் சில்லியை அரைத்து இருக்கிறார்.

Also read: அட்லியின் ஜவான் படம் எப்படி இருக்கு.? மீண்டும் பாம்பே பாவு பஜ்ஜியா இல்ல சென்னை வடை தானா

 

Trending News