திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜவான் இந்த கமல் படத்தின் காப்பியா.. மீண்டும் திருட்டு கதையில் சிக்கிய அட்லீ

அட்லீக்கும், சர்ச்சைகளுக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கிறது. தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இவர் இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படம் ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

அதிலும் படம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களாக இழுத்தடித்து வருவது பாலிவுட் ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இருப்பினும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் ஜவான் படம் கமல் திரைப்படத்தின் அட்டை காப்பி தான் என்ற ஒரு தகவல் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read: விஜய்யிடம் பேசி தந்திரமாக காய் நகர்த்தும் சங்கத்து ஹீரோ.. ஆசைப்பட்டதை நிறைவேற்றாமல் விடமாட்டாரு போல

ஏற்கனவே இப்படம் தமிழில் வெளிவந்த பேரரசு படத்தின் காப்பி என்று தயாரிப்பாளர் புகார் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஜவான் படத்திலிருந்து லீக்கான ஒரு காட்சியும் ரஜினியின் படையப்பா படத்தில் இடம்பெறும் காட்சியைப் போல் இருந்தது. இதனால் ரசிகர்கள் பாலிவுட் போய் கூட அட்லீ திருந்தவில்லையா என நக்கல் அடித்து வந்தனர்.

இந்நிலையில் தான் இப்படம் கமல் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் காப்பி என தெரிய வந்துள்ளது. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமல் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பார். பழிவாங்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தின் மையக்கருவைதான் அட்லீ ஜவான் திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறாராம்.

Also read: எதிர்பார்ப்பை தூண்டிய அட்லீ படத்தின் முதல் நாள் வசூல்.. பதானை தொடர்ந்து வேட்டைக்கு தயாராகும் ஷாருக்கான்

இந்த விஷயம் தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தமிழில் அவர் இயக்கியிருந்த படங்கள் அனைத்தும் பழைய படங்களின் காப்பியாக தான் இருந்தது. அதனாலேயே இவரை ஒரு திருட்டு இயக்குனர் என்று அனைவரும் கேலி செய்து வந்தனர். ஆனால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று அட்லீ அதை அழகாகவே சமாளித்தார்.

இருப்பினும் அவரை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட் போயாவது இவர் ஒழுங்காக படம் எடுப்பார் என்று பார்த்தால் அங்கேயும் தன் வேலையை காட்டி இருக்கிறார். அந்த வகையில் ஜவான் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்து வருவது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Also read: அப்பாவை வைத்து கல்லாக்கட்டும் மகன்.. ஷாருக்கான் வாரிசுக்கு இப்படி ஒரு திறமையா?

Trending News