College hostel Issue: கல்வி கண் திறந்த காமராஜரும், கனவு காணுங்கள் அவற்றை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என்று சொன்ன அப்துல் கலாம் போன்ற உன்னதமான தலைவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் தற்போது கல்வி ஒரு வியாபாரமாக போய்விட்டது என்று சொல்லும் அவல நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
நாம் படிப்பறிவு இல்லாமல் படும் கஷ்டத்தை தன்னுடைய சங்கத்தினர்கள் படக்கூடாது என்று நினைக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்ட மாதிரி படிக்க வைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ஆனால் தற்போது அந்தப் பிள்ளைகளில் சிலர் படிப்பை கடமைக்காக படித்துக் கொண்டு வருகிறார்கள். அதனால் தான் அதனுடைய முக்கியத்துவம் இல்லாமல் தட்டு தடுமாறி போகிறார்கள்.
படிப்பை வியாபாரமாக பார்க்கும் சமூகம்
இதற்கு மாணவர்களை மட்டுமே முழுக்க முழுக்க குறை சொல்ல முடியாது. பணமும் அதிகாரமும் கையில் இருந்தால் யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்று சில தவறான புரிதலுடன் நடக்கும் வழிமுறைகள் தான் மிகப்பெரிய தவறுக்கு காரணமாக இருக்கிறது.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பொத்தேரியில் உள்ள தனியார் மாணவர் விடுதிகளில் சனிக்கிழமை போலீசார் நடத்திய சோதனையில் சட்டத்துக்கு விரோதமான தடை செய்யப்பட்ட மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கி உள்ள விடுதிகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் தனியார் கல்லூரி விடுதியை சோதனை செய்து நடத்துவதற்கு சனிக்கிழமை 500க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சோதனையில் சட்டத்துக்கு விரோதமான தடை செய்யப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக அந்த கல்லூரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். படிப்பை வியாபாரமாக பார்க்கும் சமூகம் இருக்கும் வரை இந்த மாதிரி அக்கிரமங்களுக்கு முடிவில்லாமல் போகுது.