வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

TVK தொண்டர்கள் மாநாட்டில் செய்த அட்ராசிட்டி.. இதை தட்டிக் கேட்பாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் நேற்று நாட்காலிகளை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதியின் தவெக மாநாடு

கடந்த பிப்ரவரியில் தமிழகம் வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்குவதாக விஜய் அறிவித்து, முதல் அறிக்கையை வெளியிட்டார். இதையடுத்து, இக்கட்சியின் கொடியும் கொடிப்பாடலும் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜயின் அப்பா, எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா சோபா மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், எல்லோரும் எதிர்பார்க்கும் முதல் மாநாடு நடக்கும் என்று அறிவித்தார். அவர் சொன்ன மாதிரியே தவெக முதல் மாநாடு நடப்பதற்கு தீவிர ஆலோசனை மேற்கொண்ட விஜய் செப்டம்பர் 23 ஆம்தேதி நடக்கவிருப்பதாக அறிவித்து, அதன்பின், பல்வேறு காரணங்களால் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்டோபர் 27 ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டது.

போலீசாரிடம் முறையான அனுமதி, பார்க்கிங், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, மாநாடு நடத்த தேவையான நிலத்தை வழங்கிய உரிமையாளர்களுக்கு வாடகைப் பணமும் விஜய் தரப்பில் சரியாகக் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சொன்னபடியே சரியாக அனைது ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வி.சாலையில் நேற்று மாலை நிகழ்ச்சி தொடங்கியது.

விஜய்யின் பேச்சை காது கொடுத்துக் கேட்காத தொண்டர்கள்!

இதில், தமிழ் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகிறது. ஏற்கனவே மா நாட்டுக்கு வரும் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் பாதுகாப்பாகவும், போலீஸாரின் எச்சரிக்கைகளை மதித்து, போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும், மது அருந்திவிட்டு மாநாட்டிற்கு வரக் கூடாது என பல கட்டுப்பாடுகளை விஜய் விதித்து, அறிக்கைகள் வெளியிட்டிருந்தார்.

ஆனால், விஜயின் பேச்சை அவரது தொண்டர்களே கேட்கவில்லை என்பது அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாநாட்டிற்கு யாரும் மது அருந்திவிட்டு வரக் கூடாது என்று கூறப்பட்டதே. அங்கு மதுகுடித்துவிட்டு யாரும் ரகளையிலும், இடையூறும் செய்யக் கூடாது என்பதற்குத்தான். ஆனால் இதையும் மீறி, தலைவர் விஜய்யின் சொல்லை பொருட்டாகவே மதிக்காமல் சில தொண்டர்கள் மாநாட்டு திடலிலேயே மதுபானம் ஊற்றிக் குடித்தனர். இதுகுறித்த வீடியோக்களும் வைரலாகி பொதுமக்களை முகம் சுழிக்கவைத்தது.

தியேட்டரில் சேர்களை உடைத்த மாதிரி மாநாட்டிலும் அட்ராசிட்டி

அதேபோல் மற்றொரு சம்பவமும் நடந்தது. அதாவது விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. இப்படத்தின் டிரைலர் அக்டோபர் 5 ஆம் தேதி இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக சென்னையில் உள்ள பிரபல ரோஹினி தியேட்டரில் திரையிடப்பட்டது. விஜய்யிக்கு பெரியளவில் ரசிகர்கள் இருப்பதால் பிரத்யேகமாக ரிலீஸான இந்த டிரைலரை பார்க்க ரசிகர்களை கூட்டம் அலைமோதியது. தியேட்டருக்குள் சென்ற ரசிகர்கள் டிரையிலர் ஆக்சனுடன் இருந்ததால் அந்த குஷியில் குஷனுடன் அமைந்திருந்த சீட்டுகளை பந்தாடி, தியேட்டரையும் சூறையாடினர். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி தியேட்டர் உரிமையாளருக்கு செலவு வைத்தது.

இந்த நிலையில் நேற்றைய மாநாட்டிலும் விஜயின் ரசிகர்களும் தொண்டர்களும் அங்கிருந்த பல நாட்காலிகளை அடித்து, உடைத்து நொறுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், விஜய் நேற்று திராவிட கட்சிகளுக்கும், திராவிட மாடலையும் குறைகூறி விமர்சித்தார். ஆனால் சொந்தக் கட்சியினர் இப்படி மாநாட்டில் வாடகைக்கு வாங்கப்பட்ட சேர்களை அடித்து நொறுக்கப்பட்டற்கு தொண்டர்களை கண்டிப்பாரா? அல்லது கட்சி நிர்வாகிகளாவது கண்டிப்பார்களா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News