வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அட்ட கத்தி படத்தை மிஸ் பண்ணி 8 வருடத்தை இழந்துவிட்டேன்.. புலம்பும் சுனேனா பட நடிகர்

பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியாகி இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அட்டகத்தி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டதாக சுனைனா பட நடிகர் 8 வருடம் ஆகிவிட்டதாக புலம்பியுள்ளார்.

2012ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அட்டகத்தி. கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் போன்று அனைத்து தரப்பு கல்லூரி மாணவர்களிடமும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமில்லாமல் தினமும் பேருந்தில் பல காதல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் இந்தப்படம் கவர்ந்தது.

அறிமுக கதாநாயகனாக அட்டக்கத்தி படத்தில் நடித்த நடிகர் தினேஷ் அதன்பிறகு தமிழ் சினிமாவில் உள்ள மினிமம் கேரண்டி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நந்திதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் அட்டகத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தவர் பிரவீன் என்ற நடிகர் தானாம். தற்போது சுனைனா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் தான் ட்ரிப். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரிப் திரைப்படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ட்ரிப் திரைப்படத்தில் சுனைனாவுக்கு ஜோடியாக பிரவீன் நடித்துள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்டக்கத்தி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக ஒப்பந்தம் ஆனதாகவும் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த பட வாய்ப்பை இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை அட்டகத்தி படத்தில் நடித்திருந்தால் நடிகர் தினேஷ் தற்போது தமிழ் சினிமாவில் எந்த உயரத்தில் இருக்கிறாரோ அந்த அளவுக்கு நானும் பிரபல ஹீரோவாக வலம் வந்து இருப்பேன் என மேடைக்கு மேடை புலம்பிக் கொண்டிருக்கிறார் பிரவீன். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். என்ன இருந்தாலும் ட்ரிப் படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என மனதார நம்புகிறாராம் பிரவீன்.

praveen-trip
praveen-trip

Trending News