வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தங்கலானுக்கே டஃப் கொடுத்த அட்டகத்தி தினேஷ் கெட்டப்.. பா ரஞ்சித் மிரட்டி விடப் போகும் வித்தியாசமான புகைப்படம்

Actor Attakathi Dinesh: அட்டகத்தி, கபாலி போன்ற படங்களை தொடர்ந்து மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கும் நடிகர் தினேஷ் நடிக்க இருக்கிறார். இதற்காக வித்தியாசமான கெட்டப்பில் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய நியூ லுக் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. தற்போது பா. ரஞ்சித் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் விக்ரமின் கெட்டப் பார்ப்பதற்கே மிரள வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

Also Read: லோகேஷை பார்த்தாவது திருந்துங்க.. பா ரஞ்சித், மாரி செல்வராஜுக்கு கிடைத்த சவுக்கடி

ஆனால் அவருக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் பா. ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்திற்காக அட்டக்கத்தி தினேஷ் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்காக தினேஷும் நீளமாக தலை முடி மற்றும் தாடிகளை வளர்த்து வருகிறார்.

தங்கலானுக்கே டஃப் கொடுத்த அட்டகத்தி தினேஷ் கெட்டப்

Actor-Attakathi-Dinesh-cinemapettai
Actor-Attakathi-Dinesh-cinemapettai

தன்னுடைய கடின உழைப்பு மற்றும் திறமையால் படிப்படியாக முன்னாடி கொண்டிருக்கும் தினேஷ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஜே பேபி, தண்டக்காரண்யம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Also Read: சம்பவத்திற்கு தயாரான விக்ரம், பா ரஞ்சித்.. கமலுக்கு கொடுக்கப் போகும் டஃப்

இவருடைய கருப்பு பல்சர், ரப்பர் பந்து போன்ற படங்களின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித்துடன் மீண்டும் அட்டகத்தி தினேஷ் தனது அடுத்த படத்தில் இணைகிறார். இந்த படத்திற்காக மிக வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

அவரது இந்த நியூ லுக் ரசிகர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பா. ரஞ்சித் தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்து அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் உடைய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

Also Read: உடலை வருத்தி, விருது வாங்கியும் தோல்வியடைந்த விக்ரமின் 6 படங்கள்.. கெட்டப்பை அசிங்கமாக மாற்றிய லிங்கேசன்

Trending News