சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இறங்கி ஆடும் லப்பர் பந்து.. ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Lubber Pandhu Trailer: திறமை இருந்தும் இன்னும் முன்னணி அந்தஸ்தை அடையாத சில நடிகர்களில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் இருவரும் இருக்கின்றனர். இவர்களும் தரமான ஒரு வெற்றிக்காகத் தான் இப்போது வரை போராடி வருகின்றனர்.

அப்படிப்பட்ட இந்த நடிகர்கள் இணைந்து நடித்துள்ள லப்பர் பந்து படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஆரம்பமே கேப்டன் பட பாடலான ராசி தான் கைராசி தான் என தொடங்குகிறது. அதையடுத்து அன்பு என்ற கதாபாத்திரத்தில் வரும் ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் டீமில் கெத்து காட்டுகிறார்.

ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

அதேபோல் அட்டகத்தி தினேஷும் கிரிக்கெட்டில் அசத்துகிறார். இவர்கள் இருவருக்கும் கிரிக்கெட்டில் நடக்கும் போட்டி, அதனால் வரும் பிரச்சனை, ஹரிஷ் கல்யாணின் காதல் என ட்ரெய்லர் செல்கிறது.

இதில் ஊருக்கு நல்லவனா இருக்கிறவங்க வீட்டுக்கு நல்லவன் கிடையாது. ஒரு திறமைக்காரன் இன்னொரு திறமைக்காரன ஒத்துக்கிட்டதா சரித்திரமே இல்ல போன்ற வசனங்களும் எதார்த்தமாக இருக்கிறது.

இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லரை மாரி செல்வராஜ் தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவருக்கும் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் லப்பர் பந்து

Trending News