ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

9 வருடங்களில் இதையெல்லாம் இழந்தேன்.. மனம் உருகி பேசிய அட்டகத்தி தினேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அட்டகத்தி தினேஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் படங்களை இயக்கி வருகின்றனர்.

அட்டகத்தி தினேஷ் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு அட்டகத்தி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இவர் அதற்கு முன்பு இயக்குனராக வேண்டும் என்ற ஆசைதான் இருந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு பாலச்சந்திரன் உதவி இயக்குனராக சேர்வதற்கு சென்றுள்ளார். அப்போது பாலச்சந்தர் தினேஷ் பார்த்துவிட்டு சிரிக்க சொல்லி உள்ளார். அதன் பிறகு நடிகர் வாய்ப்பு தான் கிடைத்தது என கூறியுள்ளார்.

மேலும் சினிமாவில் பலரை பார்த்ததாகவும் பலரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். வெற்றிமாறன் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அதன்மூலம் அவரது படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என கூறினார். ஆனால் அட்ட கத்தி திரைப்படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகிறது. இதில் பலவற்றை இழந்துள்ளேன்.

முதல் படம் வெளியான போது தனது தந்தையுடன் சேர்ந்து பார்க்கவில்லை. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தனது முதல் படத்தை தன் தந்தையுடன் பார்த்து இருக்கலாம் என தோன்றியதாக கூறியுள்ளார். மேலும் தனது தந்தை யாருடன் இருந்து முதல் படத்தை பார்த்திருப்பார் போன்ற எண்ணங்கள் வருகிறது என கூறியுள்ளார்.

Attakathi-Cinemapettai.jpg
Attakathi-Cinemapettai.jpg

அதன்பிறகு குக்கூ படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் அதற்காக ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தது என தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடித்த அனுபவம் மிகச் சிறப்பானதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

முதல் படத்தில் ஒரு நடிகையுடன் காதலிப்பது போல் காட்சி இருக்கும் ஆனால் அதன் பிறகு நாம் எத்தனை நடிகைகள் காதலிப்போம் என்பது தெரியாது எனக் கூறியுள்ளார். சினிமாவில் நிலைத்து நிற்பது கடினம் ஆனால் நிலைத்து நின்றால் தான் வெற்றி பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். தினேஷ் தனது அனுபவங்களை பற்றி சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Trending News