தினேஷ், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து காதலை மையப்படுத்தி கடந்த 2012ல் ‘அட்டகத்தி’ என்ற படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் அன்று மிகப்பெரிய வெற்றியடைந்தது.
காதல் என்பது ஒருமுறைதான் வரும் என்றெல்லாம் கிடையாது, ஒன்று போனால் இன்னொன்று, அதுவும் போனால் வேறொன்று வரும் என இன்றைய காலத்து இளைஞர்களின் காதலை நகைச்சுவை கலந்து மிக அழகா எடுத்திருந்தார் இயக்குனர் ரஞ்சித்.
இப்படத்தையடுத்து கார்த்தி, கேத்ரின் தெரசாவை வைத்து ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் வெற்றி ரஞ்சித்தை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கொண்டுபோய் சேர்த்தது. ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கியதன்மூலம் உலகம் முழுவதும் பேமஸ் ஆனார் இயக்குனர் பா.ரஞ்சித்.
அந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ரஞ்சித்துக்கு இப்படம் பெரிய பெயரை வாங்கித்தந்தது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ‘நெருப்புடா’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
ரஜினியை மற்ற எல்லா இயக்குனர்களும் ஒரு மாஸ் ஹீரோவாக மட்டுமே காட்டிவந்தநிலையில் ரஜினிக்கு உள்ளே இருந்த நடிகனை நீண்ட வருடங்களுக்குப் பின் ‘கபாலி’ மூலமாக வெளியே கொண்டுவந்தார் ரஞ்சித். ரஞ்சித் ஐந்து படங்களை இயக்கிவிட்டநிலையில் தற்போது அவரது ‘அட்டகத்தி’ படத்தைப்பற்றிய ஒரு தகவல் வெளியே வந்துள்ளது.
அதாவது அட்டகத்தி படத்தின் மொத்த பட்ஜெட்டே 2 கோடி ரூபாய் தானாம். இப்படத்தின் விளம்பரத்திற்காக 1.5 கோடி செலவிடப்பட்டதாம். ஆனால், இப்படம் 4.5 கோடிக்கு விற்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சிறிய உருவாகிய இப்படம் 1 கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளதாம்.