வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஆட்டிட்யூட் இல்ல சுயமரியாதை.. ஆணாதிக்கத்தை வெளுத்து வாங்கிய எதிர்நீச்சல் ஈஸ்வரி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் அவல நிலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடராகும் .

ஈஸ்வரியும் தர்ஷனும் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய பின் ஆதிரை தர்ஷனை மிகக் கடுமையாக கண்டிக்கிறார். ஈஸ்வரி தர்ஷனை மாடிக்கு செல்ல சொல்கிறார். ஆனால் ஆதிரை ஈஸ்வரியையும் விடாமல் பயங்கரமாக திட்டியிருக்கிறார்.

Also Read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

அதற்கு ஈஸ்வரி தக்க பதிலடி கொடுக்கிறார். இதற்குப் பெயர் ஆட்டிட்யூட் அல்ல “சுயமரியாதை” என கூறி ஆதிரையை வாயடைக்க வைக்கிறார். இதைக் கேட்ட ஆதிரை அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்பது போலவும் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஈஸ்வரி இவ்வாறு பேசியது அதிர்ச்சியாகவும் இருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க அப்பத்தா ஜனனியிடம் நான் செய்த செயலுக்கு கண்டிப்பாக வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என்று கூறிக்கொண்டு இருந்தார். அதற்கு ஏற்றார் போல் கதிர் பயங்கர சத்தத்துடன் திட்டிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்து அப்பத்தாவை தேடுகிறார்.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

குணசேகரன் அதிர்ச்சியில் “முளைப்பாரி முளைப்பதற்கு முன் கும்மி அடிச்சிட்டு போயிராத”என்று கதிரின் பின்னால் செல்கிறார். இவர்களைத் தொடர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் அப்பத்தாவின் அறையை நோக்கி படையெடுக்கின்றனர் .

அப்பத்தா அப்படி என்ன செய்து வைத்து விட்டு வந்தார் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை.தற்பொழுது அந்த விஷயம் கதிருக்குத் தெரிந்துவிட்டது.அப்பத்தாவின் செயலால் வீட்டில் பயங்கர பூகம்பம் வெடிக்க போகிறது இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: 25 வருடமாகியும் மக்கள் கொண்டாடும் சன்டிவியின் ஒரே சீரியல்.. கலாநிதி மாறனை புகழ்ந்து தள்ளிய நடிகை

Trending News