வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ப்ரோமோஷனால் ஏமாந்த ஆடியன்ஸ்.. முண்டியடித்து டிக்கெட் புக் பண்ணது வேஸ்டா போயிடுச்சு

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள விருமன் திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த படம் தற்போது நல்ல வசூலும் பார்த்து வருகிறது.

ஏற்கனவே முத்தையா மற்றும் கார்த்தியின் கூட்டணியில் கொம்பன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த விருமன் திரைப்படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் தற்போது பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கார்த்தி மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தை புகழ்ந்து வந்தாலும் உண்மையில் படம் அவ்வளவாக நன்றாக இல்லை என்ற விமர்சனங்கள் தான் அதிகமாக இருக்கிறது. மேலும் படத்தின் தரம் சுமாராக இருந்ததால்தான் இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டதா என்ற ஒரு கேள்வியும் தற்போது எழுகிறது.

ஏனென்றால் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையையே கலங்கடித்தது. இதனால் படத்தை பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் ஹவுஸ்புல் ஆகும் அளவுக்கு டிக்கெட்டை முன் பதிவு செய்தனர். வார மற்றும் அரசு விடுமுறை நாட்கள் என அடுத்தடுத்து வருவதால் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது.

இதனால் படத்தின் தயாரிப்பாளரான சூர்யா நல்ல லாபம் பார்த்து விட்டார். ஆனால் ப்ரமோஷனை வைத்து நம்மை ஏமாற்றி விட்டார்களே என்பதுதான் இப்போது ஆடியன்ஸின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது. உண்மையில் இந்த பிரமோஷனுக்கு பின்னால் சில காரணங்களும் இருக்கின்றது.

அதிதியை சினிமாவில் நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வருவதற்காக தான் இந்த அளவுக்கு ப்ரோமோஷன் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் இசை வெளியீட்டு விழாவில் அவரை முன்னிலைப்படுத்தி அனைவரும் பேசியிருந்தனர். அந்த வகையில் படத்தின் கலெக்ஷனும் நன்றாக இருக்கிறது மற்றும் அதிதிக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Trending News