புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பிக்பாஸில் தரமான சாம்பவம் லோடிங்.. எல்லாரும் அந்த ஒரு ஆளுக்காக தான் வெயிட்டிங்

BB7 Tamil: கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றோடு நூறு நாட்களை எட்டி இருக்கிறது. இனி அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டில் விழா கொண்டாட்டங்கள் நடக்கப்பட்டு சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் இந்த சீசனுக்கான வின்னர் யார் என அறிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து நூறாவது நாள் கொண்டாட்டமாக இந்த சீசனில் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் ஒவ்வொருத்தராக வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் முதல் ஆளாக உள்ளே வந்தது அனன்யா தான். அனன்யா ஏற்கனவே பூகம்பம் டாஸ்க் மூலம் உள்ளே வந்து வெளியேறியதால் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு அந்த அளவுக்கு அவர் உள்ளே வந்தது பெரிய விஷயமாக தெரியவில்லை. அவரை தொடர்ந்து வினுஷா தேவி வீட்டுக்குள் வந்து எல்லோருக்கும் பயங்கர சர்ப்ரைஸ் கொடுத்தார்.

வினுஷா போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவ்வளவாக ரசிகர்கள் மனதை ஜெயிக்கவில்லை. டபுள் எலிமினேஷனில் யுகேந்திரன் உடன் வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் வெளியே வந்த பிறகுதான் அவருடைய சில நல்ல குணங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இப்படி ஒரு போட்டியாளர் வெளியேறி விட்டாரே என பார்வையாளர்கள் மனம் வருந்தும் அளவுக்கு இருந்தது.

Also Read:பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் யாருன்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சு.. இதைவிட அசிங்கம் வேற எதுமே இல்ல

அதிலும் வினுஷாவின் உடலமைப்பை நிக்சன் தவறாக பேசியது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. நிக்சன் பேசிய அந்த விஷயத்தை பிக் பாஸ் மற்ற போட்டியாளர்களின் முன்னிலையில் போட்டு உடைத்தார். அதைத்தொடர்ந்து நிக்சன் நான் இதை வினுஷா வீட்டில் இருக்கும்போதே சொல்லிவிட்டேன், மன்னிப்பும் கேட்டு விட்டேன் என அண்ட புழுகு புழுகி இருந்தார்.

எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள்

இன்று வினுஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் நிலையில் தினேஷ் அவரிடம் நிக்சன் பேசினாரா என்று கேட்டார். அதற்கு வினுஷா போன் பண்ணினார், 70 கேமராக்கு முன்னாடி அப்படி பேசிய நீ அதே 70 கேமராவுக்கு முன்னாடி வந்து என்னிடம் பேசு என சொல்லிவிட்டதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து நிக்சன் எப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வினுஷா ஏற்கனவே தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக கமலஹாசன் உரிமை குரல் கொடுப்பார் என எதிர்பார்த்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை என தெரிந்ததும் தன்னுடைய அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். இதனால் கண்டிப்பாக நிக்சன் வீட்டிற்குள் வந்ததும் வினுஷா தன்னை பற்றி தவறாக பேசியதை பற்றி நிக்சனிடம் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:6 பேர்ல ஒரு விக்கெட் அவுட்.. அவசரமாக நடந்த பிக்பாஸ் எவிக்ஷன், அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தான்

Trending News