ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சாய் பல்லவிக்கு ஆடிக்ஷனில் நடந்த டார்ச்சர்.. வெறுத்துப் போய் நடிக்க மறுத்த பரிதாபம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவரின் மிகப்பெரிய ஸ்பெஷல் இவருடைய டான்ஸ் தான். எந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் டீசண்டாக அதற்கு ஏற்ற மாதிரி உடைய அணிந்து வருவதிலும், இவர் பேசுவதிலும் கிறங்கி போய் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இந்நிலையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஹீரோக்கள் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டோமோ என்று தவம் இருந்து வருகிறார்கள். அத்துடன் ரசிகர்களின் கிரஷில் இவர்தான் இருக்கிறார். இதுவரை இவரை யாரும் வெறுத்ததும் இல்லை தவறாக கமெண்ட்ஸும் செய்து வந்ததும் இல்லை. அந்த அளவிற்கு நம்முடைய குடும்பத்தில் இருக்கும் பெண்மணி ஆகத்தான் பார்த்து வருகிறார்கள்.

Also read: தொடர் ஹிட்படங்கள் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை.. புலம்பி வரும் சாய்பல்லவி

இவர் மலைவாழ் பகுதியை சேர்ந்த பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர். இவர் இனத்திலிருந்து படிப்பது மிகவும் அரிது. அதையும் தாண்டி டாக்டர் படிப்பை முடித்திருக்கிறார். பின்பு இவருக்கு டான்ஸ் மேலே இருந்த அபிப்ராயத்தினால் கல்லூரியில் படிக்கும் இவருடைய சக தோழிகள் உன்னுடைய திறமையை நீ வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இவருடைய இனத்தில் யாரும் இந்த மாதிரி செய்வதற்கு அனுமதியே கிடையாது. அதன் பின் பல போராட்டங்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடும் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். அதில் இவர் நினைத்தபடி வெற்றியும் அடைந்திருக்கிறார். பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சினிமா வாய்ப்புக்காக அலைந்து இருக்கிறார்.

Also read: சினிமாவிற்கு முழுக்கு போடும் மலர் டீச்சர்.. துக்கத்திலும் ஒரு சந்தோசமான செய்தி

சினிமாவை பொறுத்தவரை யாரும் ஈசியாக உள்ளே நுழைந்து விட முடியாது திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதற்காக ஒவ்வொரு ஆடிக்ஷனுக்கும் சென்று சான்ஸ் கேட்டிருக்கிறார். அப்பொழுது அங்கே பல மோசமான அளவில் டார்ச்சரை அனுபவித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் நடிப்பு வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று வெறுத்துப் போய்விட்டார்.

அந்த அளவுக்கு இவரை மாடர்ன் உடைகளையும் மற்றும் அரைகுறை ஆடைகளையும் போட சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இவர் பிடிவாதமாக முடியாது என்று சொல்லி அப்படிப்பட்ட நடிப்பு வேண்டாம் என்று சினிமாவை உதறி வந்து விட்டாராம். அதன் பின் வேறு சில ஆடிக்ஷனில் கலந்து கொண்டு வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதே மாதிரி இப்பொழுது வரை சாய் பல்லவி அரைகுறை ஆடையை அணியாமல் அவரது முடிவில் தீர்க்கமாக இருக்கிறார். இதுவே இவருக்கு அதிகமான ரசிகர்கள் வர காரணம் என்று சொல்லலாம்.

Also read: பணம் பாதாளம் வரை செல்லும்.. விஜய் டிவியின் பித்தலாட்டத்தை வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி

Trending News