வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆகஸ்ட் 23 தியேட்டரில் வெளியாகும் 5 படங்கள்.. சூரியின் கொட்டுக்காளிக்கு டஃப் கொடுக்க வரும் படம்

Soori: ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரமும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐந்து படம் வெளியாகிறது. அதுவும் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை தான் இந்த படங்கள் ரிலீஸ் ஆகிறது.

இப்போது ஹீரோவாக அசத்தி வரும் சூரியின் நடிப்பில் உருவாகி இருக்கிறது கொட்டுக்காளி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு உலகநாயகன் கமல் போன்ற பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

கொட்டுக்காளி படத்திற்கு டஃப் கொடுக்கும் விதமாக மாரி செல்வராஜின் வாழை படமும் அன்று வெளியாகிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 23 தியேட்டரில் வெளியாகும் படங்கள்

அடுத்ததாக போகும் இடம் தூரம் இல்லை என்ற படமும் ஆகஸ்ட் 23 வெளியாகிறது. நடிகர் விமல் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் அதர்ம கதைகள் என்ற படமும் இதே நாளில் தான் ரிலீஸ் ஆகிறது.

வெற்றி மற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் காமராஜ் வேல் இயக்கி இருக்கிறார். மேலும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் படமான ஏலியன் ரோமுலஸ் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஆகஸ்ட் 23 வெளியாகிறது.

கெய்லி ஸ்பேனி, டேவிட் ஜான்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஃபெடே அல்வாரெஸ் இயக்கியிருக்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு திகிலூட்டும் அனுபவத்தை கண்டிப்பாக கொடுக்கும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது.

கொட்டுக்காளிக்காக காத்திருக்கும் சூரி

Trending News