வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

50 வயதில் சினிமாவை விட்டு போறேன் என அடம்பிடிக்கும் ஆண்ட்டி நடிகை.. எல்லாம் அந்த நடிகை கண்டபடி திட்டியதாலாம்!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வரும் அந்த ஐம்பது வயது ஆன்ட்டி நடிகை திடீரென இனி சினிமாவில் நடிக்க மாட்டேன், என்னை விட்டு விடுங்கள் என புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

கடந்த பதினைந்து வருடங்களாகவே தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் 2012 ஆம் ஆண்டு ஆரோகணம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படங்கள் வசூலை குவிக்கவில்லை என்றாலும் நல்ல படம் என்ற பெயரைப் பெற்று விடும்.

மேலும் தொலைக்காட்சிகளில் குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். அதில் பெரும்பாலும் கள்ளக்காதல்களை விட மோசமான பல பஞ்சாயத்துகளுக்கு தீர்ப்பு சொல்லும் ஜர்ஜ் போல் வலம் வந்தார்.

அந்த நினைப்பில் சமீபத்தில் வனிதா விஜயகுமாரின் வாழ்க்கையில் லட்சுமி ராமகிருஷ்ணன் மூக்கை நுழைக்க, வனிதா கண்டபடி சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்னதான் அது தன்னை பாதிக்கவில்லை என வெளியில் சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் தன்னை இப்படி அசிங்க படுத்தி விட்டாரே என்ற கலக்கம் இருந்து கொண்டே இருக்கிறதாம்.

vanitha-lakshmi-ramakrishnan
vanitha-lakshmi-ramakrishnan

இதனால் இனி சினிமாவை விட்டு போய்விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன். அதுமட்டுமில்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணன் போகும் இடங்களில் எல்லாம் வனிதாவின் பெயரைச் சொல்லி கிண்டல் செய்கிறார்களாம். இருபது வருஷமா கட்டிக்காத்த மரியாதையை ஒரே பேட்டியில் சிதைத்து விட்டார் என வனிதாவின் மீது கொலை வெறியில் இருக்கிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இருந்தாலும் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சியில் பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களோ, சினிமாக்காரர்கள் பேச்சை நம்ப முடியாது எனவும் ஒரு பக்கம் பேசிக் கொள்கின்றனர்.

Trending News