செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வைல்ட் கார்டு என்ட்ரியாகும் ஆண்ட்டி நடிகை.. ஒரு நாள் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் முன்னணி நடிகைகள்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் தான். சினிமாவில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்களின் உண்மை முகம் இந்த நிகழ்ச்சியின் மூலம் அம்பலமாகும். இதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம்.

அந்த வகையில் பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது 6வது சீசனை அட்டகாசமாக ஆரம்பித்துள்ளது. ஜிபி முத்து உட்பட 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல பிரபலங்களும் இருக்கின்றனர்.

Also read : பிக்பாஸ் சீசன்-6 முதல் பைனலிஸ்ட் இவர் தான்.. கொண்டாடும் சோசியல் மீடியா

அந்த வகையில் இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கவர்ச்சி சூறாவளி கிரண் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமை கிடுகிடுக்க வைக்கும் அளவுக்கு இவருடைய போட்டோக்கள் வைரலாகி கொண்டு இருக்கிறது.

ஆனால் உண்மையில் அவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதால் தான் இப்படி ஒரு விஷயத்தில் இறங்கினாராம். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள் என்பதுதான் அவருடைய கணக்கு. அவர் நினைத்தது போன்று தற்போது அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also read : உங்க கரிசனம் எனக்கு தேவையில்லை.. டிரெஸ்ஸை அவுத்து காட்டுவதற்கு இப்படியொரு விளக்கமா கிரண்

கிட்டத்தட்ட உறுதியான இந்த செய்தி மீடியாக்களில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக அவர் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் சம்பளம் கேட்டு இருக்கிறார். இதை எதிர்பாராத விஜய் டிவி தற்போது 1.5 லட்சம் சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளது.

அதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில் விரைவில் கிரண் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார். முன்னணி நடிகைகளுக்கே பிக்பாஸில் இவ்வளவு சம்பளம் கொடுப்பதில்லை. அப்படி இருக்கும்போது இவர் அசால்டாக இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்க போவது சில நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

Also read : தனித்தனியாக ரேட் பேசும் கிரண்.. அதிர்ந்து போன திரையுலகம்

Trending News