திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

80களில் கலக்கிய நடிகைதான் அவன் இவன் GM குமாரின் மனைவி.. காதல் கல்யாணமாமே!

பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜிஎம் குமார் என்பவரின் மனைவி 80களில் முன்னணி கதாநாயகி என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. பாலா இயக்கும் அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் GM குமார். அதிலும் அவன் இவன் படத்தில் ஐனஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

அது மட்டுமில்லாமல் பல படங்களில் உதவி இயக்குனராகவும் கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக பரத் மற்றும் பசுபதி நடிப்பில் வெளியான வெயில் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இவர் 80களில் கதாநாயகியாக வலம் வந்த பல்லவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்லவி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

pallavi-actress
pallavi-actress

Trending News