ஐஸ்வர்யா ராஜேஷ் கமர்ஷியல் நடிகையாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே சோலோ ஹீரோயின் படங்களில் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார்.
எல்லோரும் நடிக்க தயங்கிய காக்கா முட்டை படத்தில் இளம் வயதிலேயே இரண்டு குழந்தைக்கு தாய் வேடத்தில் நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு எல்லாமே ஏறுமுகம்தான்.
தனுஷ், விஜய் சேதுபதி போன்றோரின் படங்களில் முதன்மை கதாநாயகியாக இருந்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தற்போது இவர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மார்க்கெட்டை விரிவு படுத்தி வருகிறார்.
பெரும்பாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்கள் அனைத்துமே சோலோ ஹீரோயின் படங்களாக அமைந்து வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த த கிரேட் இந்தியன் கிட்சென் என்ற படத்தை தமிழில் எடுத்து வருகின்றனர்.
இயக்குனர் கண்ணன் எடுக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெறும் 20 நாளில் முடிவடைந்து விட்டன. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கும் இந்த படத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சூப்பர் ஹிட் பட டைட்டிலை வைக்கலாம் என யோசித்தார்களாம்.
அதுதான் பராசக்தி. பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு அந்த தலைப்பு சரியாக இருக்கும் என நினைத்து ஏவிஎம் நிறுவனத்திடம் கேட்டார்களாம். ஆனால் பராசக்தி படம் எங்கள் தயாரிப்புகளில் காவியமான ஒன்று என அதை கொடுக்க மறுத்து விட்டார்களாம்.