செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அவ்வை சண்முகி ரிட்டன்ஸ்.. அட்ராசிட்டியை ஆரம்பித்த உலக நாயகன்

Actor Kamal Haasan: இன்றைய இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் உலகநாயகன் கமலஹாசன். விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமலின் அடுத்தடுத்த நகர்வுகள் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்டேட் கொடுத்து அசத்தி கொண்டிருக்கிறார்.

படங்கள் நடிப்பதோடு சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற இளம் ஹீரோக்களின் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் கமலுக்கு அடுத்த ரிலீஸ் ஆக இந்தியன் 2 ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று உதயநிதி அறிவித்திருந்த நிலையில், இது தமிழ் புத்தாண்டு ரிலீஸ் ஆக தான் இருக்கும் என்று ஓரளவுக்கு கணிக்கப்பட்டு விட்டது.

Also Read:உச்சம் தொட்டாலும் புகழ் போதையில் சிக்காத லோகேஷ்..கமல் முதல் ரஜினி வரை பிரமிக்க வைக்க காரணம்

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் ரிலீசாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆவதில் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வருகின்றனர். கமல் நடித்த இது போன்ற நிறைய பழைய கேரக்டர்கள் இன்னும் ரசிகர்களின் பேவரைட் ஆக இருக்கிறது. இந்தியன் சேனாதிபதி, அபூர்வ சகோதரர்கள் அப்பு, தசாவதாரம் பல்ராம் நாயுடு போல் அதிகம் ரசிக்கப்பட்ட கேரக்டர் அவ்வை சண்முகி.

தமிழ் சினிமா ஹீரோக்கள் பலரும் பெண் வேடமிட்டு நடித்திருந்தாலும், கமல் அளவுக்கு யாரும் அந்த கேரக்டருக்காக கடின உழைப்பை போட்டதில்லை. தற்போது மீண்டும் திரையில் அவ்வை சண்முகி கொண்டு வரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் கமல். இந்தியன் 2 திரைப்படத்தில் சேனாதிபதி கேரக்டரை ஃப்ளாஷ் பேக்கில் காட்டும் பொழுது 20 வயது குறைவாக காட்டுவதற்காக புதிய தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துகிறார்கள்.

Also Read:தனித்துவமான டைட்டிலை பெற்ற 6 நடிகர்கள்.. கமலுக்கு உலகநாயகன் என பெயர் வைத்தது யார் தெரியுமா?

அதேபோன்று இந்த படத்தில் அவ்வை சண்முகி போன்று கமல் ஒரு காட்சியில் பெண் வேடமிட்டு வருகிறாராம். ஒரு பாடல் காட்சிக்காக மட்டும் பெண் வேடத்தில் வந்தாலும் அதற்கும் கமல் பயங்கரமாக மெனக்கெட்டு இருக்கிறார். யாரிடமும் சொல்லாமல் திடீரென கமல் அந்த மேக்கப் போடு படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பொழுது யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு நேர்த்தியாக வந்திருக்கிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவல் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து விட்டது. இந்த பட வேலைகளை முடித்துவிட்டு கமல் கல்கி படத்தின் வேலைகளை தொடங்கவிருக்கிறார். அதற்கு அடுத்து இயக்குனர்கள் எச் வினோத் மற்றும் மணிரத்தினத்தின் படங்களை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:சிம்புவை தூக்கிவிட படாத பாடுபடும் கமல்.. செஞ்ச சத்தியத்தை காப்பாற்றும் ஆண்டவர்

Trending News