திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சங்கருக்கு 5 கோடிகள் கொடுத்து திருப்பி கேட்காத தயாரிப்பு நிறுவனம்.. ரன்பீர் கபூருடன் விட்டுப் போன உறவு!

The production company paid Shankar 5 crores and did not ask for anything in return: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக முன்னிலையில் இருப்பவர் சங்கர். 

தான் இயக்கிய அனைத்து படங்களிலும் பிரம்மாண்டத்தை புகுத்தி ரசிகர்களை வியக்க வைப்பதில் இவருக்கு ஈடு இணை கிடையாது தான்.

சங்கர், தான் எடுக்கும் அனைத்து படங்களிலும் வெற்றிக்குரிய சூட்சமங்களை கலந்து ரசிகர்களை கொண்டாட வைத்துவிடுவார். இதனாலையே தயாரிப்பாளர்களின் மேக்சிமம் கேரண்டி இயக்குனராக வலம் வருகிறார்.

தற்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 வேலைகளில் பிஸியாக இருந்து கொண்டே தெலுங்கில் ராம்சரனின் கேம் சேஞ்சர் படத்தையும் முடிக்க உள்ளார் சங்கர்.

சங்கர் இயக்கிய படங்கள், திரையில் வெளியாகும் முன்பே டிஜிட்டல் உரிமை, ஆடியோ உரிமை என, படம் மொத்தமும் லாபத்துடனே விற்று தீர்ந்து வருகிறது.

படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், முதலில் அதிகம் செலவாவது ஆகிறது என்று வருத்தப்பட்டாலும் பின்னால் வரும் பெத்த லாபத்திற்காக மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

அப்படித்தான் பென்(Pen media) மீடியா என்ற  தயாரிப்பு நிறுவனம் சங்கருக்கு 5 கோடிகள் கொடுத்து ஒரு படம் பண்ண புக் பண்ணி உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்  தான் ஹீரோ என்று முடிவானது.

சங்கர் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற அந்நியன்

சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அந்நியன். விக்ரம், சதா, விவேக் மற்றும் பிரகாஷ்ராஜ்  போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான அந்நியன் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆகும். 

தவறு செய்பவர்களை கருட புராணத்தின் படி தண்டிப்பது என்ற வித்தியாசமான கதை அம்சத்துடன் அமைந்த,

அந்நியனுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரையிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த வரவேற்புடன், வசூலிலும் நல்ல லாபம் சம்பாதித்தது.

இதனைத் தொடர்ந்து சங்கர் மற்றும் ரன்பீர் கபூரின் கூட்டணியில் அந்நியன் படத்தின் அடுத்த பாகம் எடுக்கலாம் என்பதை திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இன்று வரை ரன்பீர் கபூரின் கால்ஷீட் கிடைக்கவில்லை. பேச்சுவார்த்தையோடு நின்றது அந்நியன் 2.

சங்கருக்கு கொடுத்த ஐந்து கோடிகளை திருப்பி தர வேண்டாம், வருங்காலத்தில் ஏதாவது படம் பண்ணி சரி கட்டிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது பென் மீடியா நிறுவனம்.

ஐந்து கோடிக்கு இன்ட்ரஸ்ட் மட்டுமே பல லட்சங்கள் வருமே!  அவை எதையும் கருத்தில் கொள்ளாது, சங்கரை மட்டுமே நம்பி இவ்வளவு தொகையை முதலீடு செய்துள்ளது இந்த தயாரிப்பு நிறுவனம். 

Trending News