ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மேன் ஆப் தி மேட்ச் அவருக்கே சொந்தம்., ரோகித் பெருமிதம்.! 4வது டெஸ்ட் போட்டியில் கலக்கிய மும்பை வாலாக்கள்!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. நேற்று நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று ஓவல் மைதானத்தில் வரலாற்று சாதனை படைத்தது.

50 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை வென்றுள்ளது. இதற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் இந்திய அணி ஓவல் மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

நீண்ட இடைவேளைக்குப்பின் இந்த வெற்றியைப் பெற்றதால் முன்னாள் வீரர்கள் அனைவரும் விராட் கோலியும் அவரது அணியையும் பாராட்டி வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்த போதிலும் இரண்டாவது இன்னிங்சில் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்தை தோற்கடித்தது

இரண்டாவது இன்னிங்சில் முதலாவது விக்கெட்டுக்குகே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நன்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் தனது முதல் அயல்நாட்டு சதத்தை பதிவு செய்தார். வெற்றி பெற்றபின் மேன் ஆப் தி மேட்ச் அவார்டு ரோஹித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது.

Shardul-Cinemapettai.jpg
Shardul-Cinemapettai.jpg

அப்போது ரோகித் பேசுகையில் இந்த அவார்ட் ஷர்துல் தாகூருக்கு சொந்தமானது என்றும், முதல் இன்னிங்சில் இந்திய அணி தத்தளித்துக் கொண்டிருக்கும் போது அபாரமாக விளையாடி அரை சதம் அடித்ததும், இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதம் அடித்து நல்ல ஒரு டார்கெட்டை இங்கிலாந்து அணிக்கு கொடுத்ததும் தாக்கூர் உதவியால்தான் என்று கூறினார். ஷர்துல் தாகூரும் மும்பையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News