சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரஜினி சிஷ்யன் என மீண்டும் நிரூபித்த லாரன்ஸ்.. மெய்சிலிர்க்க வைத்த தருணம்

Raghava Lawrence : ரஜினியின் தீவிர சிஷ்யனான ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மெய்சிலிர்க்கும் விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் நன்கொடை வாங்கி தனது ஆசிரமத்திற்கு தேவையான விஷயங்களை செய்து வந்தார். இப்போது நிறைய படங்களில் நடித்து வருவதால் அந்தப் பணமே போதுமானதாக இருப்பதால் அதன் மூலம் தனது ஆசிரமத்திற்கு தேவையானதை கொடுத்து வந்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 13 பைக் வழங்கிய லாரன்ஸ்

lawrence
lawrence

மேலும் லாரன்ஸ் சமீபத்தில் மல்லர்கம்பம் கலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

ரஜினியின் சிஷ்யன் என நிரூபித்த லாரன்ஸ்

lawrence-gifted-bike
lawrence-gifted-bike

அதோடு இரண்டு வாக்குறுதிகளையும் மேடையிலேயே கொடுத்திருந்தார். அதாவது அவர்களுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் வீடு கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார். அதன் முதல் கட்டமாக இன்று 13 மூன்று சக்கர பைக்குகளை வழங்கி இருக்கிறார்.

லாரன்ஸ் போட்ட ட்விட்டர் பதிவு

raghava-lawrence
raghava-lawrence

மேலும் விரைவில் அவர்களுக்கு வீடு கட்டியும் தருவதாக உறுதியளித்திருக்கிறார். மாற்றுத்திறனாளிக்கு பைக் வழங்கிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் லாரன்ஸ் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த சிறப்பான நாளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். உங்களின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் தேவை என்று லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இதுபோன்று நல்ல விஷயங்களை லாரன்ஸ் செய்து வர வேண்டும் என பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Trending News