வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அவசரமாக அறிவிக்கப்பட்ட அயலான் 2.. சிவகார்த்திகேயனுக்கு தெரியாமலே நடந்த சம்பவம்

Sivakarthikeyan-Ayalaan 2 : இந்த பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாகி இருந்தது. பல வருடங்களாக கிடப்பில் கிடந்த அயலான் படம் ரிலீஸ் சமயத்திலும் பிரச்சனையை சந்தித்து தான் வெளியானது. மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் அயலான் படத்தின் தயாரிப்பாளர் கேஜிஆர் ராஜேஷ் இடையே பிரச்சனை போய்க்கொண்டிருந்தது.

அதோடு கேப்டன் மில்லர் படத்துடன் அயலான் படம் வெளியானதால் பெரிய அளவில் வசூலும் பெறவில்லை. அதற்குள்ளாகவே அவசர அவசரமாக அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த விஷயம் சிவகார்த்திகேயனுக்கே தெரியாது என்று கூறப்படுகிறது.

மேலும் அயலான் படத்தின் உரிமம் தயாரிப்பு நிறுவனத்திடம் உள்ளதால் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் அயலான் படத்திற்கு எடுத்த காட்சிகளில் நிறைய ஃபுட்டேஜ் இருக்கிறதாம். ஆகையால் சிவகார்த்திகேயன் இல்லாமல் அந்த ஃபுட்டேஜை வைத்து அயலான் 2 படத்தை எடுக்க உள்ளனராம்.

Also Read : மீண்டும் கடனாளியான சிவகார்த்திகேயன்.. ஏலியன் கூடவே போயிற வேண்டியதான்

மேலும் கேஜிஆர் இப்போது phantomFX நிறுவனத்துடன் கைகோர்த்து அயலான் படத்தை எடுக்கிறது. இதனால் பிஎஃப்எக்ஸ் வேலைக்கு மட்டுமே கிட்டத்தட்ட 50 கோடி ஒதுக்கி உள்ளது. சிவகார்த்திகேயன் இல்லாமல் ஏற்கனவே எடுத்த காட்சிகள் மற்றும் பிஎஃப்எக்ஸ் வைத்து அயலான் 2 படத்தை எடுக்க உள்ளனர்.

ஆகையால் அயலான் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனும் தனது சமூக வலைதள பக்கத்தில் அயலான் 2 படத்திற்கான அறிவிப்பு போஸ்டரை வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் இல்லாமல் அயலான் 2 வருவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான்.

Also Read : வாத்தியை ஓரம்கட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான், கேப்டன் மில்லர் 5வது நாள் வசூல்

Trending News